சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை

Updated : ஜூன் 16, 2010 | Added : ஜூன் 14, 2010 | கருத்துகள் (152)
Share
Advertisement
ராமநாதபுரம் : ""அனைத்து தகுதிகளிலிருந்தும் இந்தி மொழி தெரியாததால், ராணுவத்தில் முக்கிய பதவிகளை தமிழர்களால் பெற முடியவில்லை,'' என கர்னல் தாமஸ் ஆபிரகாம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவையிலுள்ள ராணுவ சேர்க்கை மையம் மூலம் தொடர்ந்து ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, இத்தேர்வு நடைபெறும்.
இந்தி, பறிபோகும் பதவிகள்,கர்னல், தாமஸ் ஆபிரகாம், கவலை, Promotions, withheld, know, Hindi

ராமநாதபுரம் : ""அனைத்து தகுதிகளிலிருந்தும் இந்தி மொழி தெரியாததால், ராணுவத்தில் முக்கிய பதவிகளை தமிழர்களால் பெற முடியவில்லை,'' என கர்னல் தாமஸ் ஆபிரகாம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவையிலுள்ள ராணுவ சேர்க்கை மையம் மூலம் தொடர்ந்து ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, இத்தேர்வு நடைபெறும். தென்னிந்தியாவிலிருந்து தான் அதிகமானோர் ராணுவத்தில் சேர்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. இந்த இளைஞர்களிடம் தான் சரியான வலு மற்றும் உடற்தகுதி உள்ளது. அதனால் தான் ராமநாதபுரத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராணுவத்துக்கு ஏற்ப எல்லா அமைப்புகள் பெற்றிருந்தும், "இந்தி' மொழி தெரியாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் உயர் பதவியைப் பெற முடிவதில்லை.


ஒவ்வொருவரும் ராணுவத்தில் சேர்ந்த பின்னரே இந்தியை கற்றுக்கொள்கின்றனர். ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை சாதகமாக்கி, சில இடைத்தரகர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்; இதை யாரும் நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். எந்த பாரபட்சமுமின்றி, சரியான வழியில் தான் தேர்வு நடக்கிறது. தேர்வாளர்களின் எண்கள் ரகசியம் காக்கப்படுவதால், அதில் எந்த சாதகமும் செய்ய வாய்ப்பில்லை. இதை அனைவரும் உணர வேண்டும். இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாமஸ் கூறினார்.


போலி சான்றிதழ்: இருவர் கைது: நேற்று நடந்த முகாமில், அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இதில், திண்டுக்கலைச் சேர்ந்த செல்வம், விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், போலியான கல்விச் சான்றிதழ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிய ராணுவ அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைப் பார்த்த போலி சான்றிதழ் கொண்டு வந்த சிலர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் நடையை கட்ட ஆரம்பித்தனர்.


Advertisement
வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலைச்செல்வன் - Udumalaipettai,இந்தியா
19-ஜூன்-201004:49:02 IST Report Abuse
 கலைச்செல்வன் பேரறிஞர்களே! இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று உங்களுக்குச் சொன்னது யார்?இந்தி இந்தியாவின் மொழியே அல்ல.இந்தி பேசுபவர்கள் இந்தியாவின் பூர்வீககுடிமக்களும் அல்ல.நான் சொல்லவில்லை "இந்திய வரலாறும் திராவிட நாகரீகமும்"என்ற வரலாற்று ஆராய்ச்சி நூல் ஆசிரியர் நீலகண்டசாஸ்திரிதான் அவ்வாறு கூறுகிறார்.அடிமைப் புத்தி உள்ள,இனஉணர்வும்,சுயமரியாதையும்,இல்லாதவர்களுக்கு,இந்தி படிக்காதது,ஒரு குறையாகத்தான் தெரியும்.தமிழர்கள் பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி,ரஷ்யா செக்குடியரசு, சுவிச்சர்லாந்த்து, வளைகுடா நாடுகள் ,சீனா,ஜப்பான் போன்ற பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில்தான் பேசுகிறர்கள்.எனவே மேல்கண்ட எல்லா மொழிகளையும் தமிழ்நாட்டில் கற்றுத்தரவேண்டும் என இந்த அறிஞர்கள் போராடுவார்களா?கோணல் புத்திக்காரர்களே யதார்த்தத்திற்கு வாருங்கள்.தினசரி திருப்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் சொர்க்கபுரி வடநாட்டில் இருந்து குறைந்தது 250 பேர் வேலைக்காக வந்து இறங்குவது உங்களுக்குத் தெரியுமா?இந்த லட்சணத்தில் இந்தி படித்து எங்கு போய் என்ன கிழிக்கப்போகிறீர்கள்?போங்கையா போய் உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலமும்,கம்ப்யுட்டரும்,கத்துக் குடுங்கையா.உளுத்துப்போன உதவாக்கரை இந்தியை விட்டொழியுங்க
Rate this:
Cancel
natamai - kattukolai,இந்தியா
18-ஜூன்-201009:08:58 IST Report Abuse
 natamai சில அறிவு ஜீவிகள் ஹிந்திய எதிர்க்குது, ஒரு மொழிய மட்டும் வைத்து சாதிக்க முடியாது, குப்பைய கொட்டவும் முடியாது. ஒருவர் குறைந்தது மூன்று மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும் குறிப்பாக தமிழ், ஹிந்தி ,ஆங்கிலம். இனிமேலாவது குண்டு சட்டியில குதிரைய ஒட்டாம இருங்க
Rate this:
Cancel
ராஜன் - karamadai,இந்தியா
18-ஜூன்-201005:09:54 IST Report Abuse
 ராஜன் ஹிந்தி நம் தேசிய மொழி. அனால் இதற்கு முக்கியத்துவம் தென் இந்தியவில் கொடுபதில்லை, இதனால் எத்தனையோ மாணவர்கள் மற்றும் பலர் கல்வியிலும் வேறு துறைகளிலும் முக்கிய வாய்புகளை இழக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X