பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சகவ்யம் பயன்படுத்த வேளாண் துறை அறிவுரை

Added : பிப் 20, 2011
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு, 70 லட்சம் பேல் பருத்தி தேவைப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பருத்தி, 50 லட்சம் பேல்கள். தமிழகத்தில், பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையும், தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பருத்தியில் தொழில் நுட்பங்கள், பூச்சிமருந்து மற்றும் ரசாயன உரங்களை குறைத்து, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் தொழுவத்திலும், பண்ணையிலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயிர் ஊக்கியான பஞ்சகவ்யம் தயார் செய்யலாம். தயிர் ஊறல் ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயிர்களுக்கு உபயோகிப்பதால், பூச்சிதாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். பஞ்கவ்யம் எல்லா பயிர்களுக்கும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிக்கு எதிர்ப்பு கொடுக்கக் கூடியதாகவும் உள்ளதாக பாப்பாரப்பட்டி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X