சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியைக்கு "செக்ஸ் டார்ச்சர்': பாதிரியார் மீது போலீசார் வழக்கு

Added : பிப் 22, 2011 | கருத்துகள் (3)
Advertisement

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரியும் ஆசிரியை சகாயராணிக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஆசிரியர் சகாயராணி, நேற்று முன்தினம், கலெக்டர் முத்துவீரன், பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் குறித்து புகார் அளித்தார். நேற்று காலை பள்ளி சென்ற சகாயராணியை, பாதிரியாரின் ஆதரவாளர்கள், 500 பேர் திரண்டு, "பாதிரியார் மீது பொய் புகார் கூறியதால், உள்ளே நுழைய விடமாட்டோம்' என, பள்ளி கேட்டை மூடி மறித்தனர். போலீசார் தலையிட்டு, சகாயராணியை உள்ளே அனுப்பி வைத்தனர். பள்ளியில் நடந்துள்ள பிரச்னை குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்வின்சர்ச்சில்சிங் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சகாயராணி கொடுத்துள்ள மனு அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், மானபங்கம் செய்ய முயற்சித்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில், பாதிரியார் பீட்டர்சகாயராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியாருக்கு ஆதரவாக செயல்பட்டு பள்ளியை மூடி, சகாயராணியை உள்ளே நுழைய விடாமல் தடுத்த 500 பேர் மீதும் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் பீட்டர்சகாயராஜ் கூறுகையில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முழுக்க முழுக்க பொய்யானவை. ஊதிய உயர்வு வழங்காததற்கு அவர் அறிக்கை சமர்ப்பிக்காததே காரணம்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gugan.R - Durban,தென் ஆப்ரிக்கா
23-பிப்-201113:04:53 IST Report Abuse
Gugan.R இது ஒரு முறை அல்ல பல முறை, சர்ச்சுக்கு வழிபட வரும் பெண்கள் மீதும் பள்ளி, கல்லூரியில் படிக்க வரும் மாணவிகள் மீதும் பாதிரியார்கள் பாலியல் கொடுமைகள் செய்கிறார்கள். எத்தனையோ பெண்கள் இதை குடும்ப கௌரவத்திற்காக மறைத்து விடுகிறார்கள். ஒரு சிலர் நீதிக்கு போராடுகிறார்கள். ஆனால் அரசு ஓட்டுக்காக சிறுபான்மையினர் மீது கண்துடைப்பு நாடகம் நடத்துகிறதே தவிர முறையான நடவடிக்கை இல்லை. ஹிந்து சாமியார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் அரசு ஏன் பாதிரியார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஓட்டுக்காகவா...........R.குகன்- Durban (SouthAfrica)
Rate this:
Share this comment
Cancel
Kalyanakrishnan R - Chennai,இந்தியா
23-பிப்-201104:45:26 IST Report Abuse
Kalyanakrishnan R மத போதகர்கள் உணவு கட்டப்பாட்டை கடை பிடிப்பது மிக அவசியம். இல்லையேல்,இதுபோன்ற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. ஒரு பக்கம் அசைவ உணவு, மசாலா என உட்கொண்டால், உணர்வுகளை கட்டப்படுத்த இயலாது. ஆசை வெட்கம் அறியாது. இது போன்ற தறிகெட்ட செயல்களில், தாமஸ மற்றும் ராஜஸ உணவுவகைகள், ஈடுபட தூண்டும். ஒரு பெண் காரணமில்லாமல் தன்மீது பாலியல் எல்லை மீறப்பட்டுள்ளது என்று கூற மாட்டாள்.தக்க நடவடிக்கை அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
23-பிப்-201101:19:43 IST Report Abuse
appu திருந்தாத ஜென்மங்கள்..இவனுக மேல வழக்கு பதிவு செய்து உள்ளே போட்டா வேற வழியில வெளியே வந்துரானுக..இவனுகளை போன்ற ஆட்கள் நன்றாக் தண்டிக்கப்படவேண்டும்..இல்லாவிட்டால் இது போன்ற குற்றம் குறையாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X