அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு விழாவில் பா.ம.க.,வை "குட்டிய' தி.மு.க., அமைச்சர்

Added : பிப் 24, 2011 | கருத்துகள் (36)
Advertisement
அரசு விழாவில் பா.ம.க.,வை "குட்டிய' தி.மு.க., அமைச்சர்

நங்கவள்ளி: தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில், தி.மு.க., அமைச்சர், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையிலேயே, அவர்களது கட்சி நடவடிக்கையை, "புட்டு புட்டு' வைத்தார். இது, மேடையில் இருந்த சேலம் மாவட்ட பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 1.5 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா, மாணவியர் விடுதி, பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டுவிழா, அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: "தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்' என, பா.ம.க,வினர் கூறுகின்றனர்.


பத்து நாட்களுக்கு முன் ஒருவிதமாக பேசிய பா.ம.க,வினர், தற்போது வேறு விதமாக பேசுகின்றனர். கூட்டணியில் சேரும் போது ஒரு மாதிரி பேசுவர்; வெளியேறும் போது வேறு மாதிரி பேசுவர். அதில், கன்னையன் பரவாயில்லை; தமிழரசு, காவேரி குறித்து சொல்லவே தேவையில்லை. அதை சட்டசபையிலேயே பார்த்துள்ளேன். பா.ம.க., வெகுநாட்கள் ஒரு கூட்டணியில் இருப்பதில்லை. அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தி விட்டு, இரண்டாம் நாளே வெளியேறினர். அடுத்து தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தி விட்டு, அதுபோல வெளியேறி விட்டனர். ஆனால், அ.தி.மு.க.,வில் அவர்களால் காரியம் சாதிக்க முடியவில்லை. தி.மு.க.,விடம் மட்டும் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். தி.மு.க, அரசு, ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்தது. அதன் மூலம், அ.தி.மு.க.,வினரும் பலன் அடைந்துள்ளனர். உண்மையான அ.தி.மு.க.,வினராக இருந்தால், விவசாய கடன் தள்ளுபடியை ஏற்றுக் கொள்ளாமல், அதை திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், அமைச்சர் பன்னீர் செல்வம், பா.ம.க.,வை விமர்சனம் செய்தது, பா.ம.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Dinamalar - Jubail,சவுதி அரேபியா
25-பிப்-201120:02:29 IST Report Abuse
Nallavan Dinamalar இந்த முறையாவது ஆரம்பத்துல இருந்தே தட்டி தட்டி வைக்கனும்னு மஞ்ச துண்டு உத்தரவு போட்டிருப்பாரு! அது சரி, சம்பந்தப் பட்டவங்க ரோசப்பட்டாதானே? எங்க இந்தக் குஞ்சுமணி ஆளைக்காணோம்?
Rate this:
Share this comment
Cancel
mannaibharathi - kattumannarkoil,இந்தியா
25-பிப்-201118:19:00 IST Report Abuse
mannaibharathi சந்திரன் அவர்கள் கூறியது போல "நீங்கள் கொடுத்த பணம் அதிமுக காரன் உள்பட எல்லா மக்களும் கொடுத்த வரிப்பணம். வேண்டுமென்றால் இப்படி கூறும் பொது... அதிமுக காரன் எவ்வித வரியும் திமுக ஆளும் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டாம்... அரசும் செய்வதை ஏற்றுக்கொள்ளக்கூடாது" பேச தெரியாத ஜென்மம்தான் இந்த அமைச்சர், ஒரு முறை காட்டுமன்னர்கோயில்-ல் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆண்டு விழாவிற்கு வந்த இந்த அமைச்சர் பேசுகிறார் "இந்த பள்ளி நிர்வாகியும் நானும் நண்பர்கள், என்னடா நீ இப்போ 1 கோடி சம்பதிச்சுருப்பியா? இந்த ஸ்கூல் வச்சு..." இவருக்கும் இங்கே பொறியியல் கல்லூரி உள்ளது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது...
Rate this:
Share this comment
Cancel
Arun - indore ,இந்தியா
25-பிப்-201118:03:00 IST Report Abuse
Arun அதிமுக தொண்டன் திமுக தொண்டன் இவர்கள் எல்லாம் மக்களில் ஒருவர்தான்... திமுக arasin திட்டங்களை அதிமுககாரன் அனுபவிக்ககுடாது என்று சொல்ல நீங்கள் யார்.. இது ஒன்னும் உங்கள் வீட்டு சொத்து இல்லையே ....... உண்மையை சொன்னால் எங்கள் வரிபணத்தை கொள்ளைஅடித்து நீங்கள் அனுபவக்கிறிர்கள்..... இது உங்கள் குற்றம் அல்ல உங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களின் குற்றம் .... இதற்க்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய காலம் உங்களுக்கு வந்துவிட்டது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X