பொது செய்தி

தமிழ்நாடு

அரசு இணையதளத்தை தமிழில் மாற்றவேண்டும்:கருத்தரங்கில் வலியுறுத்தல்

Added : பிப் 26, 2011 | கருத்துகள் (2)
Advertisement

தேனி:அரசுத்துறைகளில் கோப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. துறைகளின் இணைய தளங்களும் ஆங்கிலத்திலேயே இருந்தால் தமிழ் மொழி, ஆட்சி மொழியாக இருந்து என்ன பயன். அரசு இணைய தளத்தை முழுமையாக தமிழில் மாற்ற வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சி மொழிக்கருத்தரங்கம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் தர்மசிவம் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பசும்பொன் வரவேற்றார்.
தமிழ் பேராசிரியர் அப்துல்சமது பேசியதாவது: செம்மொழி அந்தஸ்தை பெற்ற பல மொழிகளில், ஒன்று லத்தின் மொழி. தற்போது புதிய லத்தின் மொழியாக மாறிவிட்டது. சமஸ்கிருதம் மொழி அழிந்துவிட்டது. தமிழ், அராபி, சீனம் ஆகிய மூன்று மொழிகள் தான், செம்மொழி அந்தஸ்தில் உலக மக்கள் வழக்கத்தில் இன்றும் உள்ளன.இவற்றில் வாழுகின்ற மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. தமிழ் மொழி எழுதுவதற்கும், பேசுவதற்குமான மொழி அல்ல. அது மக்களின் வாழ்வியலோடு இணைந்த மொழி.
பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் தரம் குறைந்து விட்டது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அவர்களுக்கு முதலில் பயிலரங்கம் நடத்த வேண்டும். வேறு மாநிலங்களில் அம்மாநில மொழியை பாலர் பாடமாக படிக்காமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியே படிக்காமல் உயர் கல்விக்கு செல்கின்றனர், என்றார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், தமிழ் வழி இணைய கண்காட்சியை அமைத்திருந்த தேனியை சேர்ந்த சுப்பிரமணியம் பேசியதாவது: அரசு அலுவலகங்களில் கோப்புகள் தமிழில் இருப்பதில்லை. தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பெரும்பாலான துறைகள், அரசாணைகள் ஆங்கிலத்திலே உள்ளன. அரசு அலுவலர்கள் தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அரசு இணைய தளத்தை தமிழில் மாற்ற வேண்டும், என்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மூர்த்தி, கலால் உதவி ஆணையர் சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-201107:14:26 IST Report Abuse
Bala Sreenivasan தமக்கென்று நல்ல கலாசார பின்னணி உள்ள சீனாவும், ஜப்பானும்- ஏன் ஆங்கிலேயர்களை அறவே வெறுத்து வந்த பிரான்சும் கூட ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மும்மரமாக கற்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் இங்கு தமிழ் மொழி வளர்ச்சி என்பது ஒரு குறுமதி கொண்ட கூட்டத்துக்கு பிழைப்பாக போய்விட்டது! தமிழ் மிக சிறந்த மொழி; அது சிறப்பாக கற்பிக்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஒரு மொழியினால் இன்னொரு மொழி அழிகிறது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஒவ்வொரு தமிழனும்- மலயாளிகளைப்போல்- துவேஷம் இல்லாது பல மொழிகளை கற்க முன் வந்தால் தமிழும் பிழைக்கும், தமிழரும் பிழைக்க முடியும். ஆங்கிலம் படிக்க இயலாதவர்கள், விரும்பாதவர்கள் வாலறுந்த நரி போல் மற்றவர்களையும் தமிழ்ப்பற்று என்ற பெயரில் தங்கள் ஆங்கில ஆற்றலை வெட்டி எறிந்துவிடவேண்டும் என்று வற்புறுத்துவது தமிழர்களை கிணற்று தவளைகளாக செய்துவிடும். தப்பி தவறி தனி தமிழ்நாடே ஏற்பட்டாலும் ஆங்கிலம் இல்லாது செயல் படுவது முயற் கொம்பே. பின் குறிப்பு: தமிழ் உட்பட இரு மொழிகளில் முது கலை பட்டம் பெற்றவன் நான். ஆகவே மாற்று கருத்து உள்ள அன்பர்கள் என் பிறப்பையோ, இனத்தையோ, மொழிப்பற்றையோ ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல் என் கருத்தை பற்றி மட்டும் விமரிசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!
Rate this:
Share this comment
Cancel
A.DHAKSHINAMOORTHY - N.J ,யூ.எஸ்.ஏ
26-பிப்-201104:02:51 IST Report Abuse
A.DHAKSHINAMOORTHY தமிழுக்கு நான் எதிரி இல்லை ! ஆனால் , தற்போதைக்கு , கோப்புகளில் உள்ள புரியாத ஆங்கிலசொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்தலாம் ! தடாலடியாக ,எல்லாவற்றையும் மாற்றினோம் என்றால் அரசு அலுவலர்களுக்குப் புரியாமல் ,தவறுகள் நேர்ந்திடும் .மாற்றுக் கருத்துக்கள் உருவாகும் .! பத்திரங்கள், பாஸ்போர்ட்டுகள் ,நில அளவை பதிவுகள் ,சான்றிதழ்களில் நிறைய குளறுபடிகள் நடக்கும் . பிறகு எல்லாவற்றிற்கும் மொழிபெயர்ப்பு அலுவலர் தேவைப்படுவர் .சில ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் நல்லதுதான் . ஆங்கில அறிவும் அவசியம்தான் .அப்போதுதான் பிற மொழி பேசுபவர்களோடு , தமிழ் தெரியாதவர்களோடு நமது திறமையை பகிர்ந்து கொள்ளவும் சாதிக்கவும் முடியும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X