பொது செய்தி

தமிழ்நாடு

"ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்'

Added : மார் 01, 2011
Advertisement

வெள்ளகோவில் : தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், பி.ஏ.பி., பாசன விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண்மை குறித்த பயிற்சி முகாம், வெள்ளகோவிலில் நேற்று நடந்தது. கோவை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் செந்தில் குமரன், அக்கறை அறக்கட்டளை இயக்குனர் பிருதிவிராஜ் முன்னிலை வகித்தனர்.பசுமை அறக்கட்டளை தலைவர் யோகநாதன் பேசியதாவது:இயற்கை விவசாயத்தை விடுத்து, ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி வருகிறது. மண் மலட்டு தன்மை ஏற்பட்டு, எதிர்பார்த்த அளவு மகசூல் பெற முடிவதில்லை. இயற்கை விவசாயம் குறித்து தெரிந்துகொண்டு, விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவது அவசியம்.
மண்ணை வளப்படுத்த, பல தானிய பயிர் முறை சிறந்ததாக உள்ளது. சணப்பை, ஆமணக்கு, நிலக் கடலை, பயறு வகைகளை ஏக்கருக்கு 25 கிலோ விதைக்க வேண்டும். பூக்கும் பருவத்தில், பூவோடு சேர்த்து நிலத்தை உழும்போது, நல்ல உரமாவதுடன் மண் வளமும் பெருகுகிறது.ஒரு மூட்டை யூரியா உரத்தில் உள்ள சத்து, ஒரு லிட்டர் மாட்டு ஹோமியத்தில் அடங்கியுள்ளது. ரசாயன உரங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, விளைநிலங்களுக்கும், மனிதருக்கும் தீமைகளே விளைகின்றன.இறந்த பசுமாட்டின் கொம்புகளை அகற்றி, வெயிலில் உலர வைக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து கொம்பை தட்டினால், சதைப்பகுதி வெளியே வந்து விடும். கொம்பினுள் மாட்டு சாணத்தை அடைத்து, ஈரப்பதம் இல்லாத இடத்தில் மண்ணினுள் வைத்து விட வேண்டும். நான்கு மாதங்களுக்கு பின், அதை எடுத்தால், சிறந்த மண் வள ஊக்கி கிடைக்கிறது. ஏக்கருக்கு 30 கிராம் ஊக்கியை தண்ணீரில் கலந்து தெளித்தால், நிலத்தில் மண்புழு உற்பத்தி அதிகமாகிறது. அடியிலிருக்கும் மண்புழுக்கள் மேலே வந்து, மண் வளம் பெறுகிறது. இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, ஆரோக்கியமான மகசூல் பெறமுடியும்.இவ்வாறு, யோகநாதன் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X