பொது செய்தி

தமிழ்நாடு

வாழையில் ஊடுபயிராககொத்தவரை சாகுபடி

Added : மார் 02, 2011
Advertisement

ஈரோடு:ஈங்கூர் பகுதியில் வாழை பயிருடன் ஊடு பயிராக கொத்தவரங்காய் சாகுபடி நடக்கிறது.ஈங்கூர் பகுதியில் கிணற்றுப் பாசனத்தில், அதிகளவு வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி நடக்கிறது. பத்து மாதப் பயிரான வாழையில் ஊடு பயிராக விவசாயிகள் கொத்தவரங்காய், சிறிய வெங்காயம், கத்தரி போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். 90 நாள் பயிரான கொத்தவரங்காயை ஊடுபயிராக அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.விதை நடவு செய்த 30வது நாளிலிருந்து காய்ப்பு பருவத்துக்கு வரும் இந்த செடியில், 70 முதல் 90 நாள் வரை ஒரு ஏக்கரில் வாரத்துக்கு 80 முதல் 100 கிலோ வீதம் காய் உற்பத்தியாகிறது. உபரியாக கொத்தவரங்காய் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.இது தவிர விவசாயிகள் சிறிய வெங்காயம், கத்தரி போன்ற பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும், விவசாய தொழிலாளர்களின் கூலி உயர்வால், களை எடுப்பது முதல் அறுவடை வரை அதிக பணம் செலவாவதால், விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈங்கூர் விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது:அரை ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேன். ஊடுபயிராக கொத்தவரங்காய் சாகுபடி செய்துள்ளேன். இப்பயிர் விதை நடவு செய்தது முதல் 30 நாளில் காய்ப்புக்கு வரும். 70 முதல் 90 நாட்கள் வரை வாரம் ஒரு முறை காய் உற்பத்தியிருக்கும்.வீட்டு செலவுக்காக கத்தரி, சிறிய வெங்காயம் பயிர்களும் சாகுபடி செய்துள்ளேன். விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வால் ஒவ்வொரு முறை களை எடுக்கும் போது 2,000 ரூபாய் வரை செலவாகிறது. இதனால், ஊடு பயிர் சாகுபடி செய்தும் பெரியளவில் லாபமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X