அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொ.மு.க., - தி.மு.க., கூட்டணியால் யாருக்கு லாபம்?

Updated : மார் 05, 2011 | Added : மார் 03, 2011 | கருத்துகள் (52)
Share
Advertisement

கடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பதம்பார்த்த கொ.மு.க., ஏழு சட்டசபை தொகுதிகளை பெற்றுக்கொண்டு, தி.மு.க., கூட்டணியில் ஐக்கியம் ஆகியுள்ளது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கொங்கு நாட்டில் நிலவும் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் களம் கண்டது கொங்குநாடு முன்னேற்ற கழகம். கடந்த லோக்சபா தேர்தலில் புதிதாக அவதரித்த கட்சியாக தேர்தலை சந்தித்தது. தேர்தலின் போது, ஆட்சி செய்த கட்சியையும், ஆட்சி செய்யும் கட்சியையும் விமர்சித்து பட்டிதொட்டியெல்லாம் பிரசாரம் செய்தனர். ஜாதி ஓட்டுக்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு தேர்தலை சந்தித்த இக்கட்சியினர், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு லோக்சபா தொகுதியில் கணிசமான ஓட்டுக்களை பெற்று தி.மு.க.,வின் வெற்றியை பதம்பார்த்தனர். லோக்சபா தேர்தலுக்கு பிறகு கொ.மு.க..,வின் சுருதி இறங்கி விட்டது; போராட்டங்களும் குறைந்து விட்டன.


சட்டசபை தேர்தல் பேச்சு கிளம்பியவுடன், மீண்டும் மாநாடு, போராட்டங்களை அறிவித்து, கொ.மு.க.,வும் தன் இருப்பை வெளிப்படுத்தியது. கூட்டணி பேச்சு துவங்கியதும், "தி.மு.க., கூட்டணியில் கொ.மு.க., இடம் பெற்று விட்டது, ஐந்து தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது' என்ற தகவல் வெளியானது. ஆனால், "அதிக எண்ணிக்கையில் சீட் எங்கு கிடைக்கும்' என்று கணக்கு போட்ட கொ.மு.க., நிர்வாகிகள், அ.தி.மு.க., - தி.மு.க., என இரு கூட்டணியிலும் மாறி மாறி பேச்சு நடத்தினர். ஜாதி ஓட்டு எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அதிக சீட் கேட்டதால், இரு கூட்டணியிலும் கொ.மு.க.,வுக்கான "டிமாண்ட்' குறைவாகவே இருந்தது.


கொங்கு மண்டலத்தை, தன் கோட்டையாக கருதும் அ.தி.மு.க., "இப்பகுதியில் கணிசமான இடங்களில் தானே போட்டியிட வேண்டும்' என்ற எண்ணத்தில் இருக்கிறது. "கொ.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால், கொங்கு மண்டலத்தில், தான் எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க வேண்டியிருக்கும். அதனால் தனக்கு லாபம் எதுவுமில்லை' என்று கணக்குப்போட்டது அ.தி.மு.க., தலைமை; கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் சுணக்கம் காட்டியது. வேறு வழியில்லாத கொ.மு.க.,வினர், தி.மு.க., தலைமையிடம் பேச்சு நடத்தினர். கொங்கு மண்டலத்தில், தன் தரப்பு பலவீனத்தை உணர்ந்திருந்த தி.மு.க., தலைமை, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏழு தொகுதிகளை தருவதாக கூறி, கொ.மு.க., தலைவர்களுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு விட்டது.


ஏழு தொகுதிகளை மட்டுமே பெற்றுக்கொண்டு, உடன்பாடு செய்து கொண்ட கொ.மு.க., தலைமையின் முடிவு, தொண்டர்கள் மத்தியில் எந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை. "இது, தங்கள் கட்சிக்கும், கடந்த லோக்சபா தேர்தலில் காட்டிய உழைப்புக்கும் பெரும் அவமானம்' என்று, கொ.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்பித்தள்ளுகின்றனர். கொ.மு.க.,வுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும், கொங்கு சமுதாயத்தை சேர்ந்த பிற அமைப்பினரும், இந்த உடன்பாட்டை கடுமையாக விமர்சிக்கின்றனர். "ஏழு தொகுதி தேர்தல் உடன்பாட்டை எப்படி தொண்டர்களை ஏற்கச்செய்ய போகின்றனர்' என்பதே, இப்போது கொ.மு.க., நிர்வாகிகளின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.


போட்டியிடும் தொகுதிகள் எவை? "தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகளில், பொள்ளாச்சி, சூலூர், திருப்பூர், காங்கயம், பெருந்துறை ஆகியவற்றை எப்படியாவது பெற்று விட வேண்டும்' என்பது, கொ.மு.க., நிர்வாகிகள் பலரது கருத்தாக உள்ளது. எனவே, குறிப்பிட்ட இந்த தொகுதிகளை பெற்று விட கொ.மு.க., கடுமையாக முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. உடன்பாடு அறிவிக்கப்பட்டு இரு நாட்களே ஆகியுள்ள நிலையில், கொ.மு.க., - தி.மு.க., கூட்டணியால், "யாருக்கு லாபம்' என்று அரசியல் கட்சியினர் பலரும் அலசத்துவங்கி விட்டனர். "லோக்சபா தேர்தலில் கொ.மு.க., பெற்ற ஓட்டுக்கள் அனைத்தும், அரசுக்கு எதிரான ஓட்டுக்கள்' என்று கணக்கிட்டால், அந்த ஓட்டுக்கள், இத்தேர்தலில் நிச்சயம் கிடைக்க வாய்ப்பில்லை என்பது ஒரு தரப்பினரின் கருத்து. இந்த கூட்டணியால், தங்களது அணிக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பது, அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Chennai,இந்தியா
04-மார்-201123:04:12 IST Report Abuse
Guru மக்களுக்குத்தான் லாபம். எப்படியும் மண்ணை கவ்வும்
Rate this:
Cancel
Muthukumarasamy Muthurathnam - Tirupur,இந்தியா
04-மார்-201121:07:55 IST Report Abuse
Muthukumarasamy Muthurathnam நானும் கவுண்டர் இனம் தான் , கண்டிப்பாக கொங்கு முன்னேற்ற திற்கு ஒட்டு போட மாட்டேன் , காரணம் உலக திருடனிடம் போய் சேர்வது மீண்டும் தி மு க வை ஆட்சியில் அமர்த்த செய்வது , அதனால் கண்டிப்பாக போட மாட்டேன்.
Rate this:
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-மார்-201120:37:01 IST Report Abuse
villupuram jeevithan நிச்சயமாக மக்களுக்கு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X