அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்? ராமகோபாலன் விளக்கம்

Added : ஜூன் 15, 2010 | கருத்துகள் (62)
Advertisement
why hindu forefront conference conducted, ramagopalan define,இந்து முன்னணி,மாநாடு,நடத்துவது ஏன்,ராமகோபாலன்,விளக்கம்

சென்னை:""இந்துக்களுக்கும் சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு கேட்டு, இந்து முன்னணியின் ஆறாவது மாநில மாநாடு நடத்தப்படுகிறது,'' என, அதன் அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கூறியதாவது:இந்து முன்னணியின் 30வது ஆண்டு விழாவை ஒட்டி கரூரில் வரும் 20ம் தேதி, மாநில மாநாடு நடக்கிறது. பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், இந்தியாவில் இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. உலக அளவில் இந்துக்கள் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர்.இந்துக்களுக்குத் தான் அதிக சலுகைகள் வழங்க வேண்டும். நாங்கள் அதைக் கூட கோரவில்லை. நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு தரப்படும் சலுகைகள் இந்துக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே இம்மாநாடு நடத்தப்படுகிறது.


அத்துடன், கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்; கோவில்களை இடிக்கக் கூடாது; புனித பயணம் மேற்கொள்ளும் இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்; கல்வியில் பாகுபாடு கூடாது; குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும்; மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும்; பசுவதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும்; அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாடு நடக்கிறது.


இதில், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத் தலைவர் சதானந்த சுவாமிகள், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சைதன்யானந்த மகராஜ், ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் மானனீய சுரேஷ் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - Singapore,இந்தியா
16-ஜூன்-201023:51:57 IST Report Abuse
 kumar Hi All , Great comments about the ramgopal and even some people critised him.. Even am from tamilnadu but am working in delhi. I have question all people here. If you say ramgopal is wrong, ok fine ... BUT ,,, what about uniform civil code.. even in tamilnadu we can see sepreate church for HIGH caste christan and lower caste christaian... we know so many fights between them we know Musim org also started for their benfit to unite muslim people and beacsue of some selfish people now they also work in diff names and diff groups.. we all know problemr in the hindu society.. we have to solve it... yes that is human nature...(problems all ways there) we know all muslim living places r not same country they have diff coutries (iran/iraq/jordan/uae/kuwait/and so many russion splited countires too)..so please dont create HYPE ramgoapl is creating issues in tn.. We all know , last 20 yrs in tn the currnt family rules more than 12 yrs... But what is state of tn siuation...india GDp is more than 7.5 to 8%, But tamilandu gdp is less the 4.5% ... and beacsue of media with one family .. people are fooled with worng values and wrong message.. even our people r very happy. 1.Morning 9am to 11 pm tasmak 2.1 rupeee rise 3.So many functions then rs500+ saree + dohti+priyani 4.Morning to evneing more than 20-30 cinma .. enjoy you life 5.In tamilnadu we have almost more than 30 gov distristc HOPSItal is there ...But still we need insurance policy to solve the medialc problem.. so why we need a sperate ministry to take care of all the medical realted issues better gov can scrap the miniters and closed it... even our idot peopler very happy....we all know 1.8kg ton gold + more than 800/crore cash with MCI president the beauty if medical and insurnace mafia
Rate this:
Share this comment
Cancel
சமத்துவன் - சென்னை,இந்தியா
16-ஜூன்-201023:03:15 IST Report Abuse
 சமத்துவன் ராம கோபாலன் அவர்களே இது போன்ற பேட்டிகளால் மக்களிடம் பிரிவினை வாதத்தை வளர்க வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன் , அதற்கு கீழே உள்ள பதிவுகளே சான்று . நீங்கள் மக்களை மனிதராக வாழ விடுங்கள் , மாக்களாக மற்றும் முயற்சியை கை விடுங்கள் . நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் , இங்கு தங்கள் பதிவுகளை செய்த நண்பர்களிடம் ஜாதி , மதம் கடந்த சமத்துவ சமுதாயத்தை உருவாக்க , ராம கோபாலன் போன்ற புல்லுருவிகளின் பேச்சை உதாசீனபடுதுங்கள் என கேட்டு கொள்கிறேன் , நன்றி
Rate this:
Share this comment
Cancel
இ.முஹமது யூனுஸ் - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-201022:55:28 IST Report Abuse
 இ.முஹமது யூனுஸ்  இங்கு கருத்து கூறிய பலர் இந்துக்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்காததுபோல் பேசுவது விந்தையாக இருக்கிறது.அப்படி என்றால் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் பெறும் இட ஒதுக்கீடு இந்துக்கள் பெறும் இட ஒதுக்கீடு இல்லையா? இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இங்கு கருத்து சொன்னவர்கள் உயர் ஜாதி மக்கள்.அவர்கள் தங்கள் சக தாழ்த்தப்பட்ட சகோதரர்களை இந்துக்கள் என்று ஏற்று கொள்ளவில்லை.இன்றே இந்த நிலை என்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன நிலை இருந்திருக்கும்?.தன்மானத்தை இழந்தவர்கள் மதம் மாறவில்லை, தன்மானத்தோடு வாழ வழி இல்லாதவர்கள் அதை தேடி மதம் மாறினார்கள்.முஸ்லிம்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் போல் சிலர் கருத்து கூறி இருக்கிறார்கள்.மாநாடு நடத்துவது அவரவர் உரிமை,ஆனால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை பழிக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X