பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலா இருக்கு சரக்கு : தண்ணி தட்டுப்பாடு இல்லை

Updated : ஜூன் 17, 2010 | Added : ஜூன் 15, 2010 | கருத்துகள் (19)
Share
Advertisement
Tasmac, arrack, மாநாடு, தண்ணி

செம்மொழி மாநாடு முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளின் பெயர்ப்பலகை தமிழில் மாற்றப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இருமடங்கு அல்லது 20 லட்சம் ரூபாய் கூடுதல் "சரக்கு' இருப் பில் வைத்திருக்க, கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஏதுவாக, தனியார் தொழிற்சாலைகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இரவு பகலாக தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஐந்து நாள் விடுமுறையில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை மூன்று நாள் என்றும், அடுத்த இரண்டு நாள், மற்ற விடுமுறை நாட்களில் சரி கட்டப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க வசதியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "டாஸ்மாக் ஊழியர்களும் ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும்;குடும் பத்துடன் மாநாட்டில் பங்கேற்கலாம்' என, ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், முட்டுக்கட்டையாக சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், விற்பனையாளர், மேற்பார்வையாளர் பங்கேற்ற கூட்டத்தை நடத்தியது.


இதில்,"உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, மாவட் டத்தில் உள்ள அனைத்து டாஸ் மாக் மதுக்கடைகளையும் வெள்ளை அடித்து சுத்தப்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுபான விற்பனைக்கடை என்ற பெயருக்கு பதில் "தமிழ்நாடுமாநில வாணிபக்கழகம்' என பெயர் மாற்ற உத்தரவிடப்பட்டது.திருடு போகாமல் இருக்க விற்பனை செய்யும் பகுதியில் இரும்பு கதவு அமைத்து பாதுகாக்க வேண்டும் எனவும், மாநாடு முடியும் வரை அனைத்து ஊழியர்களும் கடையில் இருக்க வேண்டும் எனவும் முடிவானது. முக்கியமாக, தற்போது கடைக்கு வரும் சரக்கை விட இரு மடங்கு, அல்லது 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சரக்கை இருப்பில் வைத்திருக்க வேண்டும். கடைக்கு அருகில் அல்லது தெரிந்த பாதுகாப்பான இடத்தை குடோனாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர், உயரதிகாரிகள்.


செம்மொழி மாநாடு நடக்கும் நாட்களில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு வெள்ளை அடித்தல், பெயர்ப்பலகை மாற்றம் ஜரூராக நடந்து வருகிறது. அனைத்துக்கடைகளுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் வரத்துவங் கியுள்ளன.


- நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
17-ஜூன்-201000:27:08 IST Report Abuse
 Indian ஹலோ my dear people could you pls let me the state which doesnt have liquor shop .. Still i am not understanding you people, why you people are acting too smart.. You cant stop the liqour shop, but do you want to get some organised people like vijay maiya and all other other private sector to get benifit not by govt. See you cant stop people to drink first of all. Atleast b positive mind setup that all money s going govt not a private sector and individual person .. So you people dont want to get benefit and do you want to get benifit by private sector.. Ask the drunker to stop drinking dont criticize govt.. Let me know clearly how many who have given comment not drink ever n their life.. idiots stop commenting.. useless guys..
Rate this:
Share this comment
Cancel
sakthi - seoul,தென் கொரியா
16-ஜூன்-201018:11:54 IST Report Abuse
 sakthi அட பாவிகளா இது தமிழ் மாநாடா இல்லை தண்ணி மாநாடா ... தண்ணி அடிச்சுட்டு நல்ல தமிழ் மாநாடு நடத்துங்க,, தமிழ் சொல்லி கொடுக்காமல் (பள்ளி விடுமுறை விடுறீங்க) பள்ளி மாணவர்களையும் தண்ணி அடிக்க சொல்லி தரீங்க ..கலைஞர் அவர்களே கட்சி மாநாடு இல்ல சரக்கு ஊத்தி கொடுக்கறதுக்கு .... செந்தமிழ் மாநாடு இல்ல /// இது தண்ணி மாநாடு ,, இன் நிகழ்ச்சியை வழங்குவது உங்கள் "தமிழ்நாடுமாநில வாணிபக்கழகம்' -(டாஸ்மாக்)
Rate this:
Share this comment
Cancel
கே. Dhandapani - Cuddalore,இந்தியா
16-ஜூன்-201017:46:25 IST Report Abuse
 கே. Dhandapani கடையின் பெயரை தமிழில் வைத்தால் போதுமா? குடிப்பது தமிழர்களின் பானமாக இருக்க வேண்டாமா? விஸ்கி பிராந்திக்கு பதிலாக கள்ளு விற்பனை செய்தால் இந்த போலி தமிழ்ப் பிரியர்களின் தமிழ்ப் பற்றை பாராட்டலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X