ஹசன் அலி கைது: சுப்ரீம் கோர்ட் கெடு இன்றுடன் முடிவதையடுத்து அமலாக்கப்பிரிவினர் அதிரடி

Updated : மார் 08, 2011 | Added : மார் 07, 2011 | கருத்துகள் (21)
Share
Advertisement
புனே : பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். புனேயை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து, பல கோடி ரூபாய்களை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார். இவர் மீது வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்குபதிவு

புனே : பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.


புனேயை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து, பல கோடி ரூபாய்களை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார். இவர் மீது வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவது தொடர்பான, பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, அரசு நடவடிக்கை என்ன என்பது பற்றி , மார்ச் 8ம் தேதி (இன்று)க்குள் தாக்கல் செய்யும்படி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. புனேயில் ரேசில் பங்கேற்று குதிரைப் பண்ணை வைத்து, படிப்படியாக ஹவாலா செயல்களில் ஈடுபட்டவர் அலி. அவர் மீது பல ஆண்டுகளாக வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக வழக்குகள் உள்ளன.


இந்நிலையில், வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவின் மும்பை அலுவலக அதிகாரிகள் குழு நேற்று காலை, புனேயில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் கோரேகான் பூங்கா பகுதியிலுள்ள ஹசன் அலி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.புனேயில் குதிரை பண்ணை வைத்து நடத்தி வரும் ஹசன் அலி, கான் ரியல் எஸ்டேட் ஆலோசகராவும் உள்ளார். இவர், இந்தியாவிலிருந்து ஹவாலா வழியில் சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளது, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஹவாலா வழியான பண பரிமாற்றத்தின் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள, ரகசிய கணக்குகளில் பணத்தை சேர்ப்பதில் ஹசன் அலி வல்லவர் என்று கூறப்படுகிறது.தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வரும் ஹசன் அலி, வீட்டை கடந்த 2007 ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி மும்பையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஹசன் அலி ஆஜராகி விசாரணையில் பங்கேற்றுள்ளார். மேலும் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டபடி . ஹசன் அலி மீது விசாரணை நடத்துவதற்காக வரும் பத்தாம் தேதி ஆஜராகும்படி ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.


இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் அரசுக்கு விதித்துள்ள கெடு இன்றுடன் முடிவதால், நேற்று புனேயில் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனை முடிந்ததும், ஹசன் அலியை மும்பையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தொடர்ந்தனர். ‌தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஹசன் அலி கைது செய்யப்பட்டார்.


இது குறித்து ஹசன் அலியின் வக்கீல் கவுர் கூறுகையில், " ஹசன் அலியை அமலாக்க அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணையை நடத்தியது வழக்கமான ஒன்று தான். சில ஆவணங்கள் தொடர்பாக, சந்தேகங்கள் எழுந்ததால் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஹசன் அலி சுவிஸ் வங்கியில் எந்த பணத்தையும் முதலீடு செய்யவில்லை. அவரிடம் கறுப்பு பணம் ஏதும் இல்லை. அனைத்திற்கும் கணக்கு உள்ளது' என்றார்.


அமலாக்க பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டில் உள்ள ஹசன் அலியின் சொத்துக்கள் குறித்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹசன் அலியின் நெருங்கிய தொடர்புடைய வர்த்தகர் காசிநாத் தபாரியாவின் கோல்கட்டா இல்லத்தில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனக்கும் ஹசன் அலிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தபாரியா கூறினார். ஹசன் அலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் என மும்பை, குர்கான், ஐதராபாத் நகரங்களில் சிலரது வீடுகளிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஹசன் அலி வெளிநாடுகளுக்கு தப்பித்து போகாமல் இருப்பதற்காக, அமலாக்க பிரிவு அதிகாரிகள் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஹசன் அலி பற்றிய விவரங்களுடன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Jay - Chennai,இந்தியா
08-மார்-201110:30:55 IST Report Abuse
Manikandan Jay அவங்கள எப்படியோ இத ஒழுங்கா செஞ்சா சரி .......... முதல்ல அரசியல்வாதிங்க எத்தன பேர் இருக்காங்கனு பாருங்க ... புடிச்சா எல்லாரையும் புடிச்ச மாதரி..............
Rate this:
salem senthil - salem,இந்தியா
08-மார்-201118:02:57 IST Report Abuse
salem senthilnee innaa businas menaa?...
Rate this:
Cancel
seyed - nambuthaalai,இந்தியா
08-மார்-201109:51:53 IST Report Abuse
seyed சமீபத்திய டெல்லியில் சிக்கிய பாகிஸ்தானின் பாடகர் பாகிஸ்தான் கதையும், இவரின் இந்திய கதையும் இரு நாட்டின் அரசியல்வாதிகளின் தனிதனி மூலையில், ஒரே மாதிரி வலையில் பின்னப்பட்டவையாகதான் இருக்கும். இவர் கட்ட வேண்டிய வரிப்பணத்தை வைத்து பல திட்டங்களை நிறைவேற்றி விடலாம். இப்படி எல்லாவற்றுக்கும் சுப்ரீம் கோர்ட்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு, இவர்களை போன்ற பெரிய முதலைகளுக்கு சலாம் போட்டுவிட்டு, சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பொது ஜனங்களிடம் இவர்களின் வேலை திறமையை காட்டி சொல்லொணா துயரை கொடுக்கிறார்கள்.
Rate this:
Cancel
Thangamani - Salalah,ஓமன்
08-மார்-201109:38:41 IST Report Abuse
Thangamani migavum காலதாமதமான nadavadikkai. arasum அரசு adhikaarigalum என்ன தான் செய்கிறார்கள்?. அரசு அதிகாரிகளை கைது செய்து adaiththaale இவர் போன்றவர்கள் uruvaaga மாட்டார்கள். பிசினஸ் மேன்களையும் arasiyal வியாதிகளையும் கெடுப்பவர்கள் அதிகாரிகள் தான். எனவே சுளுக்கு எடுக்க வேண்டியது அரசையும் அரசு அதிகாரிகளையும் தான். ஹசன் அலியை விட்டு விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X