பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதிக்கு போடும் ஓட்டு...ஜனநாயகத்துக்கு வைக்கும் வேட்டு...

Updated : மார் 09, 2011 | Added : மார் 07, 2011 | கருத்துகள் (13)
Advertisement

தென் மாவட்டங்களில் தேவர், வடக்கு மாவட்டங்களில் வன்னியர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் என சமுதாய ஓட்டு வங்கியைக் குறி வைத்தே, முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தனித் தொகுதிகளாக இருந்தாலும், தலித் சமூகத்தில் எந்தச் சாதிக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதைப் பார்த்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளரின் தகுதி இவற்றையெல்லாம் தாண்டி, "ஜாதிக்காரர்' என்ற அடிப்படையில் ஓட்டு கிடைக்கும் என்பதே தமிழக மக்களின் மீது திராவிட மற்றும் தேசியக்கட்சிகள் குத்தியிருக்கும் நிரந்தர முத்திரை. ஒரு தொகுதியில் எண்ணிக்கையில் குறைவாகவுள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும் "சீட்' கிடைக்காமல் போக அடிப்படையும் இதுவே. கட்சிக்காக மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் அதிகபட்சமாய் கட்சிப் பதவி அல்லது உள்ளாட்சிப் பதவிகளோடு அவர்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கட்சிக்காகவும், மக்களுக்காகவும் (!?) உழைப்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தும் "ஜாதி அரசியலை' தாண்ட முடியாமல், இளைஞர்கள் அரசியலை வெறுக்கின்றனர்.


பல்வேறு ஜாதிகளிலும், கல்வியறிவு, அரசியல் அறிவு, சமூக அக்கறை என எல்லாத்திறமைகளையும் கொண்ட நேர்மையான கட்சி நிர்வாகி ஒருவர் இருந்தாலும், அவரை தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்க்கும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. இந்த விஷயத்தில் திராவிடக்கட்சிகள் வழிகாட்டுகின்றன; தேசியக் கட்சிகள் பின்பற்றுகின்றன. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஓட்டுப் போட்டதால்,ஜாதியின் வேட்பாளரை கட்சிகள் தேர்வு செய்கின்றனவா, ஜாதி வேட்பாளரை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்பது ஆழமாய் ஆராய வேண்டிய விஷயம். சில ஆண்டுகளில் நடந்துள்ள தேர்தல் முடிவுகளை அலசி, ஆராய்ந்து பார்த்தால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.


கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளில், ஜாதி என்கிற மாயை இன்னும் அரசியலில் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இதன் ஆதிக்கம் குறைந்து, மறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நகர மயமாதலில், எல்லா மக்களும் எல்லா இடங்களிலும் கலந்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது. நகரங்களில் உள்ள தொகுதிகளில் ஜாதி ஓட்டுக்களைக் கணக்கெடுப்பது, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது போன்றது. நகர மக்களைப் பொறுத்தவரை, விலைவாசி, குடிநீர், மின் தடை என அன்றாடப் பிரச்னைகளுக்கும், உள்ளூரில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்குளே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்களைப் பதிவு செய்கின்றனர்.


இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டு, இந்த தேர்தலிலாவது ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யாமல், கட்சிக்கும், மக்களுக்கும் உண்மையாக உழைக்கத் தயாராயிருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். குறைந்தபட்சமாக, இந்த ஒரு மாற்றத்தையாவது கொண்டு வருகிற தேர்தலாக இது அமைந்தால், அதுவே மக்களுக்குக் கிடைக்கிற முதல் வெற்றி.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - ஈரோடு,இந்தியா
11-மார்-201110:32:38 IST Report Abuse
elangovan இங்கு ஜாதிக்கு எதிராக கருத்து சொல்லியிருக்கிறீர்கள். நல்லது.உங்களில் யாராவது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி இல்லை(அதற்க்கான வழி இருந்தும்) என்று சொல்லி சேர்த்தீர்கள்.அப்படி இல்லை என்றால் அடுத்தவனுக்கு அறிவுரை சொல்வது அபத்தம்.
Rate this:
Share this comment
Cancel
saravanan - madurai,இந்தியா
08-மார்-201122:58:16 IST Report Abuse
saravanan எல்லா கிராமங்களையும் நகரங்களாகவும், மாநகரங்களாகவும் மாற்ற சமத்துவ, சம தர்ம செந்தமிழ் அரசு முற்படும் வேளையில் தமிழகம் முழுவதும் சாதிகள் மறையலாம்.
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர், தமிழ் நாடு ,இந்தியா
08-மார்-201116:29:21 IST Report Abuse
ராம.ராசு தினமலரின் செய்தி மிகவும் அப்பட்டமான ஒன்று / உண்மை. ஆனால் சாதி அடிப்படையிலான தேர்தல் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே பொருந்தும். என்றாலும் "சாதி அரசியல்" மட்டுமே முழுமையாக உள்ளது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் சாதிவாரி மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும் முதல்வர், பிரதமர் என்று வரும்போது குறைவான மக்களை கொண்டுள்ள சாதியை சேர்ந்தவர்தான், அத்தகைய உயரிய பொறுப்பில் இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள். அதற்க்கு உதாரணமாக முன்னால், இந்நாள் முதல்வர்கள், பிரதமர்களை சொல்லலாம். எவ்வளவுதான் படிப்பறிவு பெற்று இருந்தாலும், இன்றைய மக்கள் மனநிலை "சாதி" என்ற இன உணர்வு இல்லாமல் இருப்பது இல்லை. அதே சமயம் ஒரு சாதியை சேர்ந்தவரை அதே சாதியினர் தங்களுக்கான தலைமையாக பார்க்கும் பக்குவமும் இல்லாமல் இருப்பதும் உண்மை. அதனால் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். அதனால் ஓரளவு பிரபலமான, குறைந்த மக்கள் தொகை கொண்ட இனத்தை சேர்ந்தவரும் முதல்வராக, பிரதமராக இருக்க முடிகிறது. இது போன்று ஒரே சாதியை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் சார்ந்து இருப்பது, பல தரப்பட்ட சாதி, மதங்களை கொண்டுள்ள நமது நாட்டில் மற்றவர்களோடு அனுசரித்து போகும் மனநிலையை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். முள்ளை முள்ளால் எடுப்பத்தை போல சாதி உணர்வை சாதியை வைத்தே நீக்க முடியும் என்பதுதான் இன்றைய நமது நாட்டின் எதார்த்த நிலை. சாதி என்பது வெளிப்படையாக பேசப்பட்டு வந்தாலும், முன்பு இருந்த சாதிச் சண்டைகள் இப்போது இல்லை என்பது உண்மை. சாதித் தலைவர்களே என்றாலும் அவர்களுக்குள்ளான சந்திப்புகள் சண்டையாக இல்லாமல், அமைதியான சூழலை உருவாக்கும் பக்குவம் கொண்டதாகவே இருக்கிறது. சாதி மறுத்து, படிப்பு, பொருளாதார அடிப்படையில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகமாக நடைபெற்றால் நாளடைவில் சாதி என்பதே அர்த்தமற்றதாவிடும். அரசியல் கட்சிகளை குறைசொல்வதை விட படித்தவர்கள் தாங்கள் படித்ததிற்கு ஏற்றவாறு நடந்து கொண்டால், "சாதிக்கு போடும் ஓட்டு " என்பது இல்லாமல் போய்விடும். படித்தவர்கள் பண்படுவார்களா.....!!!!!!! ?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X