அரசியல் செய்தி

தமிழ்நாடு

யாருக்கு எந்த தொகுதி; காங்., - தி.மு.க., இன்று மாலையில் மீண்டும் பேச்சு

Updated : மார் 11, 2011 | Added : மார் 10, 2011 | கருத்துகள் (44)
Share
Advertisement
யாருக்கு எந்த தொகுதி; காங்., - தி.மு.க., இன்று மாலையில் மீண்டும் பேச்சு

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக, தி.மு.க., குழுவினருடன் காங்கிரஸ் ஐவர் குழு, நேற்று இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தி.மு.க., போட்டியிட்ட பல தொகுதிகளை, காங்கிரஸ் கேட்பது தான் இழுபறிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை மீண்டும் இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேசினர்.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பின் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீட்டுக்கு அடுத்ததாக, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சி குழுவினரிடையே நேற்று காலை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. காலை 10.30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, ஒன்னேகால் மணி நேரம் நீடித்தது. "கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வேண்டும், இந்தத் தொகுதிகளில், தொகுதி சீரமைப்பினால் விடுபட்ட தொகுதிகளுக்கு, மாற்றுத் தொகுதிகளை அளிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டது. காங்கிரசுக்கு, கூடுதலாக ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் பட்டியலை, காங்., ஐவர் குழு, தி.மு.க., குழுவிடம் அளித்தது. அப்போது, பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும், தி.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் தி.மு.க., ஐவர் குழு பரிசீலித்தது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்களை, காங்கிரஸ் குழுவிடம் தெரிவித்த, தி.மு.க., குழு, மாற்றுத் தொகுதிகளை அளிக்குமாறும் காங்கிரஸ் குழுவிடம் கேட்டுக் கொண்டது.

ஆனால், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளில், தி.மு.க.,போட்டியிட்ட இடங்களும், பா.ம.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளும் அதிகமாக இருந்ததால், முதல் கட்டப் பேச்சில் முடிவு எட்டப்படவில்லை. அதனால், மாலை 5.50 முதல், 6.30 வரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸ் கேட்கும் ஆறு தொகுதிகள், தி.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்பதால், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. தங்கபாலு, நிருபர்களிடம் கூறும் போது,"நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை, தி.மு.க., - காங்கிரஸ் மட்டும் முடிவு செய்ய முடியாது. கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, நாளை (இன்று) காலை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம்' என்றார்.

காலை பேச்சு முடிந்த பின்னர் அறிவாலயத்தை விட்டு வெளியே வந்த தங்கபாலு இன்று மாலையில் பேச்சு தொடர்ந்து நடக்கும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Selvan - Tirunelveli,இந்தியா
12-மார்-201102:40:31 IST Report Abuse
T.Selvan சேலம் செந்தில் உன் விமர்சனத்தை பார்த்தால் உன்னை ஊழம்பாரையில் உடனே சேர்ப்பது நல்லது என்று தெரிகிறது. ஒரு கட்சி மீது பற்று இருக்கவேண்டியது தான் ஆனால் வெறி இருக்க கூடாது. மனிதனாக பிறந்தால் சிந்திக்கும் திறன் வேண்டும்,கொஞ்சம் மானம் ரோசம் வேண்டும். தி.மு.க ,காங்கிரஸ் உறவு இல்லை என்றவுடன் வெடிபோட்டு இனிப்பு வழங்கிய தொண்டன் காங்கிரஸ்குக்காக வாக்கு கேட்டு சென்றால் அவனுடைய மனைவியே சூல‌யெடுத்து அடிப்பா. ஊரில் நாக்கை புடுங்குகிர மாதிரி கேள்வி கேட்பார்கள். உன்னைபோன்ற வெறியர்கள் மான அவமானத்தை பற்றி கவலை படாமல் இருக்கலாம், ஆனால் நல்ல குடும்பத்தில் உள்ளவர்களால் அது முடியாது. அதேபோல் நல்லது கெட்டதை அலசி ஆராயும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அவர்களால் ஊழல் அராஜக ஆட்சி,ரௌடிசம்,விலைவாசி உயர்வு,சுயநலம் இவைகளை உட்கொள்ள முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். மானம்,சூடு,சொரணை உள்ள தி.மு.க தொண்டனால் பா.ம.க,காங்கிரஸ்வுடன் இணைந்து பணியாற்ற முடியாது.இப்படிக்கு உண்மை தொண்டன்.
Rate this:
Cancel
Ravi Chandran - chennai,இந்தியா
11-மார்-201121:58:16 IST Report Abuse
Ravi Chandran சோனியாவின் இத்தாலி மூளை முன், நம்ம ஊர் கருநதி அய்யாவின் ராஜ்தந்திரம் வேலை செய்யவில்லை. ராஜா அர்ரெஸ்ட்- இ காரணம் காட்டியே 63 சீட் வாங்கி விட்டார்கள். வேண்டிய தொகிதிகளை வாங்குவதற்கு, CBI - யை விட்டு கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் அவர்களிடம் விசாரணை செய்து, மறைமுகமாக கருணாநிதி அய்யா அவர்களுக்கு செக் வைகிறார்கள். இவ்வளவு நாள் DMK ஆட விட்ட, சுருட்ட விட்ட காங்கிரஸ் இப்போது சட்டையை பிடிக்கிறது. ஆட்டை கடித்து,மாட்டை கடித்து இப்பொழுது டைரக்ட்-ஆக CM குடும்பத்தயே தொட்டு விட்டார்கள். ஒரே கட்டிடத்தில் ஒரு பக்கம் தொகுதி பேச்சு வார்த்தை இன்னொரு பக்கம் கருணாநிதி அய்யாவின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை!!! எவ்வளவு பெரிய அவமானம் இது. அவமானம் கருணாநிதி அய்யாவுக்கு மற்றும் இல்லை. ஒட்டு மொத்த தமிழ் மக்க்களும்கும்தான். வடக்கின் முன்னால் தெற்கை தலை குனிய வியது விட்டார்கள். ராஜினாமா டிராமா மற்றும் பிற வேலைகள் சோனியா மேடம் முன் எடுபட முடியாமல் பொய் விட்டதே,.வினை விதைத்தவர்கள் வினையை அறுக்கிறார்கள். பீகார்-ல் மற்றும் வடக்கில் படு தோல்விகளை சந்தித்த காங்கிரஸ், மாண்புமிகு கருணாநிதி அய்யா மூலம் தமிழ் நாட்டில் மிரட்டியே கால் ஊன்ற பார்கிறார்கள். போஸ்டர் ஓட்ட கூட தொண்டர் இல்லாத காங்கிரஸ்,எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் கருணாநிதி அய்யாவின் முதுகின் மேல் ஏறிக்கொண்டு ஜெயிக்க பார்கிறது. அவர் விரலை எடுத்து அவர் கண்ணையே குத்துகிறார்கள். மீன் முள் தொண்டையில் மாட்டி கொண்ட வேதனையில் இருக்கிறார் கருணாநிதி அய்யா. தமிழ் வித்தகர் அவருக்கு "முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் " என்று சொல்ல வேண்டியதில்லை. காங்கிரஸ் எவ்வளவு சீட் வாங்கினால் என்ன, தீர்ப்பை எழுத போவது அந்த மகேசன்தான் - மன்னிக்கவும்- மக்கள் தானே.! இரவிச்சந்திரன்
Rate this:
Cancel
manivaasagam - Madurai,இந்தியா
11-மார்-201111:42:48 IST Report Abuse
manivaasagam இதன் விளைவு என்னவென்று கேட்டால் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு விரும்பிய தொகுதி கிடைக்கவில்லையே என்ற கடுப்பில் உள்ளடி உள்குத்து வேலைகள் செய்து மற்ற கூட்டணி கட்சியினரை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் .. ஆக மொத்தம் திமுக கூட்டணியின் தோல்வி மேலும் மேலும் மெருகேற்ற பட்டு உறுதி செய்ய படுகிறது .. மக்களுக்கு இனி விடிவு காலம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X