கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? விசாரணை குழு அமைப்பு
கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? விசாரணை குழு அமைப்பு

கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? விசாரணை குழு அமைப்பு

Updated : ஜூன் 16, 2010 | Added : ஜூன் 16, 2010 | கருத்துகள் (404) | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர்
Ramnad School girl issue : Inquiry commission setupகழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? விசாரணை குழு அமைப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.


இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சரியான நேரத்தில் வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது, என்று தெரிவித்தனர்.


இதற்கிடையில் பள்ளி கழிப்பறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை கிடந்ததால், குழந்தையை பெற்றெடுத்தது மாணவியாகத்தான் இருக்கும் என முடிவு செய்த ஆசிரியர்கள், சந்தேகத்தின் பேரில் மாணவி சுரிதாவை விசாரித்தனர். முதலில் மறுத்த மாணவி, பின்னர் தான் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு யாருக்கும் தெரியாமல் 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பள்ளி கழிப்பறையிலேயே குழந்தை பெற்றேடுத்த மாணவியை பார்த்து மற்ற மாணவிகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட் மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.


பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவியைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் ஊர் கிராமம் என்பதால் அவரது வீட்டு முன் ஏராளமானோர் கூடி விட்டனர். கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று பலரும் மாணவியிடம் கேட்டனர். ஆனால் மாணவி கண்ணீர் வடித்தாரே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. மாணவியின் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். தாயாரின் கண்காணிப்பில்தான் மாணவி படித்து வந்தார். தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாணவியின் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.



இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், படிக்கும் வயதில் காதல் வயப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலின ஈர்ப்பு காரணமாக தவறு நடந்து விடுகிறது. இந்த மாணவி விவகாரத்தில் எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்றும் தெரியவில்லை, என்று தெரிவித்தார்.



ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் இதுபற்றி கேட்டபோது, பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி மேற்கொண்டு படிக்க விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும், என்றார்.



விசாரணை குழு : இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார். ஹெப்சிபா பியூலா ஜெயராணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு இன்று காலை, சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் சக வகுப்பு தோழிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என கல்வித்துறை வட்டார தகவல்கள் ‌தெரிவிக்கின்றன. மேலும் இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கல்வித்துறை சார்பில் நட‌வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் படிக்கும் வயதிலேயே வயிற்றில் குழந்தையை சுமந்த அந்த மாணவி குற்றவாளியா? மாணவியை கர்ப்பமாக்கிய காமுகன் குற்றவாளியா? அல்லது 10 மாதங்கள் மகள் வயிற்றில் குழந்தை வளருவதை தெரியாமல் இருந்த பெற்றோர் குற்றவாளியா? வகுப்பில் படிக்கும் குழந்தை கர்ப்பமாக இருப்பதை அறியாத ஆசிரியர்கள் குற்றவாளியா?! யாரைத்தான் குற்றம் சொல்வது?!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (404)

16-செப்-201020:25:19 IST Report Abuse
ராம கிருஷ்ணன் அச்சுந்தன் வயல் அம்மா வோட அரவணைப்பும் அப்பா வோட கண்டிப்பும் இல்லாத பொண்ணுகளோட நிலைமை பாத்திகளா.
Rate this:
Cancel
suresh - sorathankuzhi,இந்தியா
27-ஆக-201023:36:33 IST Report Abuse
suresh சின்ன பெண்ணை இந்த மாதிரி உண்டகியவன் கடவுள் அவனுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருப்பர் இருந்தாலும் அவனை போலீஸ் விடகூடாது
Rate this:
Cancel
பஷீர் - chennai,இந்தியா
26-ஜூன்-201015:51:15 IST Report Abuse
பஷீர் அந்த குழந்தைக்கு அப்பா ஒரு வேலை ஸ்கூல் டீச்சர் அக கூட இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X