அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

Updated : மார் 15, 2011 | Added : மார் 15, 2011 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை : தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர்.நிருபர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது:முஸ்லிம் லீக் கட்சிக்கு, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படுவதற்காக, எங்களிடம் ஒரு தொகுதியை பெற்று, காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. நெருக்கடியான காலத்தில், கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஏற்படுவதற்கு உறுதுணையாக இருந்ததால், எங்களுக்கு மீண்டும் மூன்று தொகுதியை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Usman - chennai,இந்தியா
16-மார்-201113:58:40 IST Report Abuse
Syed Usman துறைமுகம் தொகுதியில் திருப்பூர் அல்தாப் போட்டியிடுவார் என பரவலாக பேசப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
mohammed ali - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-201100:39:41 IST Report Abuse
mohammed ali திமுகவின் முஸ்லிம் சிறுபான்மை பிரிவு தான் இந்த முஸ்லிம் லீக் மாநாடு. பல கோடி செலவு செய்து நல்லிணக்கர் விருது கலைஞருக்கு கொடுத்து பல்லாக்கு தூக்கினார்கள். இன்று வந்த அல்தாப்பிற்கு முஸ்லிம் லீக் திமுக சின்னத்தில் ஒதுக்கிய சீட்டை கொடுக்க மஞ்சல் துண்டு கட்டளை போட்டு விட்டது. சமுதாயத்தின் பெயரில் நல்ல குதிரை சவாரி தொடங்கி விட்டார்கள் முஸ்லிம் லீக் கட்சியினர்
Rate this:
Share this comment
Cancel
Mohammed - Tirunelveli,இந்தியா
16-மார்-201100:15:36 IST Report Abuse
Mohammed அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X