தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி

Added : மார் 16, 2011 | கருத்துகள் (43)
Advertisement
தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி

இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார்.
ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார்.இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். "கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.


இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார்.தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.


இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.


இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது டில்லி நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appu - madurai,இந்தியா
17-மார்-201119:57:59 IST Report Abuse
appu ங்கொய்யால அவுக எஸ்டேட்டு காலேஜு நிலம் எல்லாம் வாங்கலாமாம், இவுக தீவு வாங்குனா அது மட்டும் பெரிய குத்தமாம்.இத அ தி மு க காரன் சொல்ல அருகதை இல்லாதவன்.இதையே ஒரு நடுவுனிலைமையான ஆளோ அல்லது ஒரு ம தி மு க,தே மு தி கா காரனோ சொன்னா ஒத்துகளாம்.அ தி மு க சொம்புகள் இதை பற்றி விமர்சிக்க தகுதி இல்லாதவன்.
Rate this:
Share this comment
Cancel
prabha - cbe,இந்தியா
17-மார்-201118:50:03 IST Report Abuse
prabha hai velu neeenga sonnathu romba correct!
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
17-மார்-201117:35:48 IST Report Abuse
sundaram WHERE IS THAT VASUGI COIMBATORE?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X