சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Updated : மார் 17, 2011 | Added : மார் 17, 2011 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்ஷா நேற்று தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் : சாதிக் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தார். வெளிப்புற காயங்கள் ஏதும் சாதிக் உடலில் இல்லை என்றார். கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசைகளை மேலும் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ruban - chennai,இந்தியா
17-மார்-201116:16:58 IST Report Abuse
ruban உண்மையை சொல்லிட்டு செத்துருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X