சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி

Added : மார் 17, 2011 | கருத்துகள் (2)
Advertisement
தற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி

சென்னை : தற்கொலை என்பதை இப்போது கூற முடியாது என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் கூறினார். சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில், சாதிக் பாட்சாவின் உடலை, ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு பேராசிரியர் மற்றும் டாக்டர் டிகால், யோகலட்சுமி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி தடயவியல் இயக்குனர் டாக்டர் சாந்தகுமார் ஆய்வு செய்த பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பின் வெளியில் வந்த, ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு பேராசிரியர், டாக்டர் டிகால் கூறியதாவது: இறந்தவரின் உடலில், கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட தழும்பு, சிராய்ப்பைத் தவிர, வேறு எந்த காயங்களும் இல்லை. அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு தான் இறந்திருக்கிறார் என்பதில் எந்த ஐயமும் இல்லை; நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூச்சுத் திணறலுக்கு காரணம் தூக்கு போட்டதால் தான் ஏற்பட்டதா என்பதை அறிய, கழுத்துப் பகுதியில் உள்ள சதைகளை, உடல் நோய்க்குறியாய்வு (பேத்தாலஜி), "டெஸ்ட்'க்கு அனுப்பியுள்ளோம். அந்த முடிவு வந்த பின்பு தான் தீர்க்கமாக சொல்ல முடியும். மைக்ரோஸ்கோப் மூலம் செய்யப்படும் இந்த ஆய்வில், உயிரோடு இருந்த போது, தூக்கில் தொங்கினாரா அல்லது இறந்த பின் நடந்ததா என்பது தெரியும். சாதாரணமாக இறந்த பின், இரண்டு மணி நேரத்திற்குள் தூக்கில் தொங்க விடப்பட்டாலும், அதற்கான தடயங்கள் இருக்கும். இறுக்கப்பட்ட சதைகள், நல்ல நிலையில் உள்ள சதைகள் இரண்டையும், மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்க்கும் போது, உண்மை என்ன என்பது தெரிந்துவிடும். அதற்கு ஏதுவாக, நாங்கள், சிறு, சிறு துண்டுகளாக எடுத்து அனுப்பியுள்ளோம். இவ்வாறு டாக்டர் டிகால் கூறினார்.


தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: சாதிக்கின் இறப்பு எப்போது நேர்ந்துள்ளது? இவரது இறப்பு பிணவறையில் சேர்க்கப்பட்டதற்கு, முந்தைய 12 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம்.


அவர் விஷம் சாப்பிட்டுள்ளாரா? இறந்தவரின் மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும், ஆய்வுக்காக பேத்தாலஜி துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளன. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் இல்லை. அவர் வயிற்றில், பாதியளவு செரிமானமான உணவு இருந்தது. அதில், எந்த வாசனையும் இல்லை.


இது தற்கொலை தான் என உறுதியாக கூற முடியுமா? ஆய்வு முடிவுகள் வரும் வரை, இது தற்கொலை தான் என, உறுதியாக கூற முடியாது. இவ்வாறு டாக்டர் டிகால் பதிலளித்தார்.



Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
18-மார்-201116:28:29 IST Report Abuse
Nallavan Nallavan பெரிய வழக்கு சம்பந்தப் பட்ட நபர் என்பதால் மருத்துவர்கள் இப்படித்தான் ஜாக்கிரதையாகப் பேசுவர். எத்தகைய மரணம் என்றாலும் தற்போதைய மருத்துவத் தொழில் நுட்பத்தின் படி ரிபோர்ட் கொடுக்க அதிக பட்சம் இரண்டு நாட்கள் போதுமானது! மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளார் என்பது பொத்தாம் பொதுவான காரணம். அதைச்சொல்வதற்கு டாக்டர் கூட தேவையில்லை!
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
18-மார்-201101:08:39 IST Report Abuse
Sekar Sekaran டாகடர் படிப்பு என்பது இந்த விஷயத்தில் தேவையே இல்லாத ஒன்று. தெள்ளதெளிவாய் தெரியும்.. அதனை வாசகர்களே இறந்த உடனே சொல்லி விட்டார்கள். எப்படி இறந்தார்..ஏன் இறந்தார் என்று. உள்ளங்கை நெல்லிக்கனியை தேடி பார்க்க வேண்டுமோ? குருடா என்ன? விவகாரம் பெரிதாய் இருக்கும்..பார்ப்போம்..மூடி மறைக்கப்படுமா..பூனை குட்டி வெளியே வருமா என்று..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X