சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு

Added : மார் 17, 2011
Advertisement

சென்னை : சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு தொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X