சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"மரணம் அல்ல... ஒரு படுகொலை'

Added : மார் 17, 2011
Advertisement

சென்னை : ""ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் ஒரு படுகொலையாகும். இந்த படுகொலை குறித்து, சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,'' என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.


இது குறித்து ஜவாஹிருல்லா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் அவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனருமான சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்பது தான் உண்மை. சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட, அவர் மூச்சுத்திணறி தான் இறந்திருக்கிறார் என்று அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கிடைக்கும் தகவல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தி.மு.க., தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது, வாடிக்கையாகி விட்டது. தா.கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ் துவங்கி இன்றைக்கு சாதிக் பாட்சா வரை இது தொடர்கிறது. இந்த சம்பவத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதே போல, சாதிக் பாட்சா படுகொலை குறித்து சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X