இந்தியா

70 தொகுதியாவது கொடுங்களேன்: மம்தாவிடம் காங். கெஞ்சல்

Added : மார் 18, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது. காங்கிரஸிற்கு மம்தா கொடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்ததைத்தொடர்ந்து ,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் எனத்தெரிகிறது. மேற்குவங்கத்திற்கு 6 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இத்ததேர்தலில் மம்தா 62 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதிகூட காங்கிரஸ் கட்சிக்கு கி‌டையாது என்பதில் உறுதியாக உள்ளார். இரு கட்சிகளிடையே பல முறை பேச்சுவார்‌த்தை ஏற்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை. குறைந்தது 70 தொகுதிகளாவது கொடுங்க‌ளேன் என காங்கிரஸ் கட்சி மம்தாவிடம் வலியுறத்தியுள்ளது. இந்நிலையில் தொகுதி உடன்பாடு தொடர்பாக மம்தா பானர்ஜி வியாழக்கிழமை வரை காங்கிரஸ் கட்சிக்கு கெடு விதித்திருந்தார். அது நேற்றுடன் முடிந்ததையடுத்து இன்று இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மம்தா வெளியிடவுளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 62 தொகுதிகள் காங்கிரஸிஸ்கு மம்தா ‌ஒதுக்கியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கூடுதலாக 8 தொகுதிகள் கேட்டு 70 தொகுதிகளாவது ‌‌ஒதுக்குமாறு ‌வலியுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காங்கிரஸ் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரணாப்முகர்ஜி, சோனியாவில் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
18-மார்-201109:34:34 IST Report Abuse
manoharan மம்தாவின் கை சுத்தமாக இருக்கிறது. ஆகவே அவர் கை ஓங்கி இருக்கிறது. இங்கே அப்படி இல்லையே. ஒரே நாற்றம். மிரட்டலை திரும்ப பெற்று அடங்கி கிடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X