பொது செய்தி

தமிழ்நாடு

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் பிரார்த்தனை

Added : மார் 20, 2011 | கருத்துகள் (1)
Advertisement
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் பிரார்த்தனை

ராமேஸ்வரம் : கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழா, இந்திய - இலங்கை பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையுடன் சிறப்பாக முடிந்தது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் நேற்று மாலை, ராமேஸ்வரம் திரும்பினர்.
இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவை, கடந்த 16ம் தேதி நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றி, துவக்கி வைத்தார். இதில், பங்கேற்க, தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் படகில் சென்றனர். நடுக்கடலில் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்குப்பின், கச்சத்தீவில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தீவின் அடர்ந்த காடு, கடற்கரையில் கூடாரம் அமைத்தும், வெட்டவெளியில் தங்கியும் பக்தர்கள், நேற்று காலை ஆறு மணிக்கு நடந்த சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய - இலங்கை ஒற்றுமை, உலக அமைதி, சுனாமியில் பாதித்த ஜப்பான் நாட்டிற்காக மெழுகுவத்தி ஏற்றி, கூட்டு பிரார்த்தனை செய்தனர். ஒன்பது மணிக்கு நடந்த அந்தோணியார் தேர்பவனியை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட பக்தர்கள், மாலையில் ராமேஸ்வரம் வந்தனர்.


சிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளி முதல்வர் கமிலா கூறியதாவது: கச்சத்தீவு குறித்து கேள்விப்பட்ட நாங்கள், ஒருவித எதிர்பார்ப்புடன் சென்றோம். நடுக்கடலில் அமைதியாக, அழகாக உள்ள தீவில் இருநாட்டு மக்களும் சங்கமித்து, கூட்டுப் பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சியை தந்தது. இலங்கை கடற்படை, போலீசாரும் தேவையான உதவிகளை செய்திருந்தனர்.


"தமிழர்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் கஷ்டப்படுவதாக' இலங்கை பெண்கள் கூறினர். இருநாட்டு மக்களும் இனம்,மொழி உணர்வுடன் பங்கேற்றது, மனநிறைவை தருகிறது. அடுத்த ஆண்டு மூன்று நாள் விழாவாக நடத்தப் போவதாக இலங்கை பாதிரியார்கள் கூறியதால், அடுத்த ஆண்டும் கச்சத்தீவு செல்வேன். இவ்வாறு கமிலா கூறினார்.


நிகழ்ச்சியில், தமிழக பாதிரியார்கள் மைக்கில்ராஜ் (ராமேஸ்வரம், வேர்கோடு) சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், தேவசகாயம்(மதுரை), பெஞ்சமின்(தஞ்சாவூர்), அனலின் (கன்னியாகுமரி, தக்கலை), சென்னடி(கோவை), சந்தியாகு (திருச்சி), டேவிட் (திண்டுக்கல்), இலங்கை பாதிரியார்கள் லியோ ஆம்ஸ்ட்ராங்(புங்கொடிதீவு), சகாயம்(யாழ்பாணம்), ராபர்ட்சன் (ஊர்காவல்துறை), யாழ்பாணம் கலெக்டர் இமெல்டா சுகுமாரன், நீதிபதி வளன் ஆனந்தராஜ், இலங்கை ராணுவ மேஜர் மகேந்திர குதிர்சிங்கா, வடக்கு கடல்பிராந்திய கடற்படை கமாண்டர் சுஜித் வீரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பணத்தை மாற்ற எக்சேஞ்ச் மையம்


தமிழக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்ட இலங்கை கடற்படையினர், தீவில் செல்வதற்கு வேறு அனுமதி சீட்டு வழங்கினர். விழா முடிந்து திரும்பிய போது இலங்கை கடற்படை வழங்கிய அனுமதி சீட்டு பெறப்பட்டு ராமேஸ்வரத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் தரப்பட்டன.


இந்திய மக்களுக்கான நலம்புரி சேவைகள்' என்ற பெயரில் தற்காலிக முகாம் அமைத்திருந்த இலங்கை கடற்படையினர், தமிழக பக்தர்களுக்கு நேற்று காலை சாப்பாடு, பிஸ்கட் பாக்கெட், வாழைப்பழம், மாம்பழ ஜூஸ் பாக்கெட், ஐஸ்கிரீம், தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். தீவை சுற்றிப் பார்ப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.


இலங்கை கடற்படையினரால் கேன்டீன், இலங்கையர்கள் சிலரால் தற்காலிக ஓட்டல்கள், கடைகள் அமைத்து தின்பண்டங்கள்,தேநீர், தொப்பிகளை விற்பனை செய்தனர். தமிழகத்திலிருந்து சென்ற பலரும் கடை அமைத்து சிகரெட், லுங்கி, கீ-செயின்,செய்யது பீடிகளை விற்றனர்.


இந்திய பணத்தை மாற்றுவதற்கு வசதியாக கச்சத்தீவில் "பாங்க் ஆப் சிலோன்' சார்பில் பணப்பரிமாற்ற மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து சென்ற பக்தர்கள், இந்திய பணத்தை மாற்றி இலங்கை பணம் மூலம், தேவையான பொருட்களை வாங்கினர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
21-மார்-201106:24:21 IST Report Abuse
Amalraj Penigilapati சீன குடில்கள் எதுவும் இந்த முறை காணப்படவில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X