பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா

Added : மார் 21, 2011 | கருத்துகள் (3)
Advertisement
சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் கூட்டாளி சாதிக் பாட்சா மரண வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழும் சூழலில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால், ராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 16ம் தேதி, சாதிக்கின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மறுநாள் காலை 9.45 மணிக்கு பிணவறைக்குள் நுழைந்த டாக்டர் டிகால், 1.30 மணிக்கு உடல் வெளியில் சென்ற பின், வெளியே வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் அவரை தடுத்து நிறுத்திய நிலையில், சில தகவல்களை தெரிவித்து விட்டுச் சென்றார். பரபரப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவை பல தரப்பிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் திடீரென ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவியது.


இது தொடர்பாக, டாக்டர் டிகால் கூறியதாவது: சாதிக் பாட்சாவின் உடலை பரிசோதனை செய்த பின், நான் ராஜினாமா செய்யவில்லை. கடந்த 3ம் தேதியே ராஜினாமா கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்குனர், சுகாதாரத்துறை செயலரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் என்னை பணியில் இருந்து விடுவிக்காததால், இம்மாதிரியான சிக்கலில் மாட்டிக் கொண்டேன். தேர்தலில் நிற்பதற்காகத் தான் ராஜினாமா செய்தேன். முக்கிய கட்சியில், "சீட்' கேட்டிருந்தேன். அவர்கள் கொடுக்கவில்லை; ஆதலால், சுயேச்சையாக கட்டாயம் போட்டியிடுவேன். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன்.


பிரேதம் வரும் போது பிணவறையில் உள்ள ஊழியர்கள், பிரேதத்தை பெற்றுக் கொண்டு அடையாளங்களை பரிசோதனை செய்து பிணவறை உள்ளே வைக்க அனுமதிப்பர். பிரேத பரிசோதனை செய்யும் போது, போலீசார் முன்னிலையில், இறந்தவரின் உறவினர் அடையாளம் காட்டுவார். அதன் பிறகே, பிரேத பரிசோதனை செய்வோம். இறந்தவர் சாதிக் பாட்சாவா? வேறு யாருமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.


போலீசார் கொடுக்கும் அடையாளங்களை வைத்து, இறப்பிற்கான காரணத்தையும், இறப்பின் தன்மையையும் சோதனை செய்து, அறிக்கை அளிப்பேன். நான் இதுவரை 500 பிரேத பரிசோதனைகளுக்கு மேல் செய்துள்ளேன். அது தொடர்பான வழக்குகளில் இருந்து நான் தப்ப முடியாது. அதுபோல் தான் இந்த வழக்கும்; இதிலும் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் சாட்சி சொல்வேன். இவ்வாறு டிகால் கூறினார். டாக்டர் டிகால் தன்னை பணியில் விடுவிக்க கேட்டுள்ள விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கக் கோரி, கோர்ட்டில், "மேண்டமஸ்' மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cakes - Chennai,இந்தியா
22-மார்-201109:29:32 IST Report Abuse
cakes ஆண்டவன் படைப்பில் எத்தனையோ கோமாளிகளும் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
22-மார்-201105:57:25 IST Report Abuse
sathish முழு பூசணிக்காயை இனி எப்படி சோற்றில் மறைப்பது என யோசனைகளை நடக்கும். டி. எம்.கே தலைவர்கள் பாடு இனி திண்டாட்டம் தான். ஆனால் அதுவரை இவரும் சாதிக்கை பின் தொடராமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
KRISHNAMOORTHY Somangili Perumal - MADURAI,இந்தியா
22-மார்-201102:43:25 IST Report Abuse
KRISHNAMOORTHY Somangili Perumal நல்லவேளை , டாக்டர்.டி கால் இன்னும் உயிருடன் உள்ளார் என்பதே மிகவும் அதிசயமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X