சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கபாலு வீட்டு முன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Updated : மார் 25, 2011 | Added : மார் 25, 2011 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை:மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியில் வலுவடைந்து வருகிறது. தங்கபாலு வீட்டிற்கு முன் இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். தங்கபாலுவை முற்றுகையிட வந்த மகளிர் காங்கிரசாரை, போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு சம்பவம் அரங்கேறியது.தமிழக காங்கிரஸ் கட்சியில் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சிலர் மீது எழுந்துள்ள அதிருப்தி அக்கட்சியில் நீடித்து வருகிறது. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரும், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மயிலாப்பூர் தொகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

தியாகராஜனுக்கு மயிலாப்பூர் தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மேலிட தலைவர்களிடம் சிதம்பரம் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், தங்கபாலு தன் மனைவி ஜெயந்திக்கு அத்தொகுதியை சிபாரிசு செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயந்திக்கும் சம்பந்தமில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த இரு நாட்களாக தியாகராஜன் ஆதரவாளர்கள் தங்கபாலுவின் உருவபொம்மை எரிப்பு, சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.நேற்று காலை, 11 மணிக்கு அடையாறு காந்திநகரில் ஏராளமான காங்கிரசார் குவிந்தனர்.


கவுன்சிலர் சாந்தி, தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ்பிரகாஷ், மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர், மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ரஞ்சன்குமார் உட்பட ஏராளமானோர், அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள, தங்கபாலுவின் வீட்டிற்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.அப்போது வீட்டில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்த தங்கபாலுவை முற்றுகையிடுவதற்கு, மகளிர் காங்கிரசார் முயற்சித்தனர். போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து மகளிர் காங்கிரசாரை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் தள்ளு முள்ளு அரங்கேறியது.இதற்கிடையில் தங்கபாலு உருவபொம்மையை சிலர் தூக்கி கொண்டு வந்து தரையில் வீசி அடித்தனர்.


உருவபொம்மையை கொளுத்த முற்படும் போது போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மகளிர் காங்கிரசை சேர்ந்த இரு பெண்கள், திடீரென மண்ணெண்ணெய் டின்னை எடுத்து, தங்களது உடலில் ஊற்றிக் கொண்டனர்.உடனே போலீசார் மண்ணெண்ணெய் டின்னை பறிமுதல் செய்தனர். மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பெண்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். இதனால் தீ குளிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு பின் போலீசார் தடி அடி பிரயோகிக்க தயாரானதும், காங்கிரசார் கலைந்து சென்றனர்.அடையாறு சர்தார்படேல் சாலையிலும், காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கபாலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தினால் அடையாறு பகுதியில் பதட்டமான சூழ்நிலையும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தங்கபாலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது வீடு அமைந்துள்ள தெரு வழியாக வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
26-மார்-201114:57:40 IST Report Abuse
Gopi காங்கிரசுக்கு கொளுத்தி போட வேண்டாம், அவனுங்களே கொளுத்திப்பானுங்க. நாம வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்.
Rate this:
Cancel
Silluvandu Sillu - chennai ,இந்தியா
26-மார்-201114:06:01 IST Report Abuse
Silluvandu Sillu காங்கிரஸ் ஒரு கட்சி என்று யார் சொன்னது? ... அது ஒரு கோஷ்டி.
Rate this:
Cancel
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
26-மார்-201112:27:31 IST Report Abuse
parasuraman sharma கலக்கிட்டார் தேவர்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X