அரசியல் செய்தி

தமிழ்நாடு

"கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம்

Updated : மார் 29, 2011 | Added : மார் 27, 2011 | கருத்துகள் (125)
Share
Advertisement
சென்னை: ""தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க.,வினர், ஒரு சில இடங்களில் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவது, கட்சியின் கழுத்தை அறுப்பது போல் இருக்கிறது,'' என, முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது, பெரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில், "கடமை, கண்ணியம்,

சென்னை: ""தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க.,வினர், ஒரு சில இடங்களில் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவது, கட்சியின் கழுத்தை அறுப்பது போல் இருக்கிறது,'' என, முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது, பெரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில், "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது தி.மு.க.,வின் முழக்கமாக இருக்கிறது. கடமையிலும், கண்ணியத்திலும் கட்சி கடைபிடிக்க வேண்டிய உறுதியை விட, கட்டுப்பாட்டில் தான் அதிக உறுதியை கடைபிடிக்க வேண்டும். கடமை தவறினாலும், கண்ணியம் தவறினாலும், கட்சிக்கு சிறிதளவு சேதாரம் தான் ஏற்படும். கட்டுப்பாடு தவறினால், கட்சியே முழுமையாக சேதமுறும்; எனவே, கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள்'என, கூறினார்.


இந்தத் தேர்தலில், ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சியின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல், இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து, சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கட்சியின் கழுத்தையே அறுப்பதைப் போல், சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் சிலரின் போக்கு கண்டு, கண் கலங்குகிறேன். "இவர்களா இப்படி?', என்று மனம் நொந்து போகிறேன். என் மீது இது வரை காட்டிய அன்பும், கட்சியின் மீது கொண்டிருந்த பற்றும், பாசமும் போலியானவையல்ல; உண்மையானது தான் என்பதை நிரூபிக்க, சம்பந்தபட்டவர்களுக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அவர்கள், உடனடியாக அதிகாரப் பூர்வமற்ற போட்டியிலிருந்து விலகிக் கொண்டு, கட்சியின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காத்திட வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.PERUMALRAJA - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஏப்-201101:47:35 IST Report Abuse
R.PERUMALRAJA இந்திரா காந்தி என்னும் ஒரு பெண்ணை கல்லால் அடித்தது தி மு க தான் ... மூப்பனார் என்னும் தமிழன்னுக்கு பிரதம மந்திரி பதவி கொடுக்ககூடாது என்று சொன்னது தி மு க தான் தன மகனுக்கு எதிராக கட்சியில் வைகோ விற்கு செல்வாக்கு கூடுகிறது என்று எண்ணி வைகோ வை கழற்றி விட்டதும் தி மு க தான் ..... தன்னை அரியணையில் அமரவைத்ததும் எம் ஜி ஆர் யை கோமாளி என்று கேலி செய்து தி மு க வை வெளியேற்றியதும் கலைஞர் தான் .... தமிழர்களே சிந்திபீர் யார் உண்மையான கழுத்தறுப்பு கேஸ் யார் என்று
Rate this:
Cancel
Chandran - Tamil Nadu,இந்தியா
29-மார்-201104:50:27 IST Report Abuse
Chandran தாத்தா போட்டோ உண்மையிலேயே கழுத்தை அறுக்கும் பொது எப்படியிருக்குமோ அப்படியே தத்ரூபமாய் இருக்கிறது...அப்படியே வெச்சுக்குங்க... இரண்டு புத்திரர்கள் புரண்டு சண்டையிடும் போதும் இந்த போஸ் உண்மையிலேயே தேவைப்படும்...
Rate this:
Cancel
sathya / ilangai - colombo,இலங்கை
29-மார்-201101:48:22 IST Report Abuse
sathya / ilangai பாவம் தான் வளர்த்த செல்ல பிள்ளை தன் கண் முன்னாலே இறந்தால் என்ன துக்கம் ஏற்படுமோ அதுதான் இப்போ கலைஞருக்கும், இவர் வளர்த்த DMK இவர் கண் முன்னே அழிவது உறுதி , வினை வித்தவன் வினை அறுப்பான், வெங்காயம் வெச்சவன் வெங்காயம் அறுப்பான். பெரியார் 2G பத்தி ஒண்ணு சொல்லலே போல இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X