அரசியல் செய்தி

தமிழ்நாடு

தங்கபாலு மனைவி வேட்புமனு தள்ளுபடியானது; எதிர்ப்புகள் மத்தியில் மயிலை வேட்பாளரானவர்

Updated : மார் 28, 2011 | Added : மார் 28, 2011 | கருத்துகள் (46)
Share
Advertisement
Thangabalu wife's nomination paper rejected, தங்கபாலு மனைவி வேட்புமனு தள்ளுபடி ; எதிர்ப்புகள் மத்தியில் வேட்பாளரானவர்

சென்னை: பல்வேறு எதிர்ப்புகள் இடையே சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிட்ட காங்., தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் மாற்று வேட்பாளராக காட்டியிருந்த தங்கபாலுவின் மனு அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் காங்.,வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட கிடைக்கவில்லையே என கோஷ்டிகள் ரீதியாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தொண்டர்கள் வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏன் காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் ஒரு சில அதிருப்தியாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. குறிப்பாக மயிலை தொகுதி வேட்பாளர் ஜெயந்திக்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை கண்டித்து உருவபொம்மை எரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை அதிகாரிகளால் நடந்தது. இதில் ஜெயந்தி தங்பாலு மனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.இவருடைய மனுவில் தேவையான 2 ஆவணஙகள் இணைக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்ததாகவும், இது மாயமாகி விட்டதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும் என்றும் தங்கபாலு நிருபர்களிடம் தெரிவித்தார். மேலு் அவர் கூறுகையில் என்வே நான்தான் இப்போது இந்த தொகுதியின் காங்., வேட்பாளர். ஆவணஙகள் எப்படி காணாமல் போனது என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

போட்டி வேட்பாளர் புகார்: இந்த தொகுதியில் இவருக்கு போட்டியாக மனுத்தாக்கல் செய்த சிவகாமி மகிழ்ச்சி தெரிவித்திருப்பதுடன் தங்கபாலு மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இவர் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம அளித்துள்ள புகாரில் ; ஜெயந்தி, தங்கபாலு நடத்தும் டி.வி.,யின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ஆனால் இவர் இதனை மனுவில் குறிப்பிடவில்லை. மேலும் இவர் மீது கிரிமினல் வழக்கும் உள்ளது.

கிருஷ்ணகிரியில் குழப்பம் நீடிப்பு : இதேபோல் கிருஷ்ணகிரியிலும் வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் நி‌லவியது; முதலில் ஹசீனா சையது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் மக்பூல் ஜான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மக்பூல் ஜான் கடைசிவரை வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. இவர் கடத்தப்பட்டு விட்டாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையி்ல் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த ஹசீனா, இந்த குழப்பத்தால் சென்னைக்குத் திரும்பி விட்டார். காங்கிரஸ் மேலிடம் முறையாக அறிவித்தால் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் பல தொகுதிகளில் போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Venkata Subramanian - Coimbatore,இந்தியா
29-மார்-201109:59:24 IST Report Abuse
R Venkata Subramanian தங்கபாலு எல்லாம் ஒரு தலைவரா? இவரெல்லாம் தலைவராகினா எப்படி உருப்படும் காங்கிரஸ். காங்கிரஸ் தனிப்பெருங்கட்சியாக வாய்ப்பு இல்லை
Rate this:
Share this comment
Cancel
Mad Maddy - Boston,யூ.எஸ்.ஏ
29-மார்-201105:19:20 IST Report Abuse
Mad Maddy தமாசோ .... தமாசு..... ஐயோ ஐயோ.... உங்களுகே ஆப்பு திரும்ப வச்சிடாங்களா ?? இதுலே ரெண்டு படிவம் காணோமே ... ச்பெக்ட்ரும் ல எத்தனை படிவம் காணமல் போய்இருக்கும் ????? எங்களுக்கு எப்படி எரியும்?? உழைச்சி வரி கட்றோம் இல்ல.. உங்கள மாதிரியா பிச்சை எடுத்து சாப்பிடுறோம்..??
Rate this:
Share this comment
Cancel
venkata - chennai ,இந்தியா
29-மார்-201103:39:46 IST Report Abuse
venkata Danga balu Dhanga mudiyaliye !!! Ungali vechchu kamedi keemedi edhuvum pannalaye !!! Dhool badathila Sakeela scenellam en ippo gnyambakam varuthunnu theriyaliyaeaeaeae!!! subbu .mylapore.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X