பொது செய்தி

தமிழ்நாடு

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!' போர்டு வைத்த துணிச்சல்: வாக்காளர் இவரை அனைவரும் பின்பற்றுவார்களா?

Added : மார் 29, 2011 | கருத்துகள் (16)
Advertisement
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!' போர்டு வைத்த துணிச்சல்: வாக்காளர் இவரை அனைவரும் பின்பற்றுவார்களா?


மதுரை : "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல,' என, வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணாநகர் குருவிக்காரன்சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி இல்ல காப்பாளர் ஜான்(51).


சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டுகிறது. தேர்தல் அதிகாரிகள் மூலம் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்தும் வருகிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் கட்சிகள் திணறுகின்றன.பணம் பெற்று ஓட்டளிக்க கூடாது, என்ற விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜான் துணிச்சலாக, "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல. ஓட்டளிக்க பணம் தர முன்வரும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை,' என, எழுதி வீட்டின் முன் தொங்கவிட்டுள்ளார்.


அவ்வழியாக செல்வோரின் கவனத்தை இவ்வாசகங்கள் ஈர்க்கின்றன. இதை கவனித்து தெருவில் குடியிருக்கும் சிலர் இது போல எழுதி வைக்க திட்டமிட்டுள்ளனர். ஜானின் மனைவி சிந்தா சேக்கிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஜான், பத்து தேர்தல்களில் ஓட்டளித்துள்ளார்.


அவர் கூறியதாவது:எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, ஓட்டுக்கு பணம் வழங்க கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஓட்டுக்கு பணம் வழங்குவது குற்றம். அதை பெறுவது அதை விட குற்றம். லஞ்சம் வாங்குவதற்கு சமம். ஓரிரு நாட்களுக்கு முன், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என, கலெக்டர் சகாயம் பேசியதாக தினமலர் இதழில் செய்தி படித்தேன்.அதை பின்பற்ற முடிவு செய்து, எழுதி வைத்தேன். இதை பார்த்துவிட்டு, மற்றவர்களும் எழுதி வைப்பதாக கூறியது மகிழ்ச்சி என்றார்.இவரை போன்று அனைத்து வாக்காளர்களும், பணம் பெற்று ஓட்டளிக்க மாட்டேன் என்று சபதம் ஏற்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vsrinivasan - pondicherry,இந்தியா
31-மார்-201108:50:10 IST Report Abuse
vsrinivasan போர்ட் மாட்டி ஒட்டு விற்பனைக்கு அல்ல என்றது சரிதான். கூடவே பொது பிரச்னை குடிநீர்,மின்சாரம், சாலை வசதி செய்து கொடுக்க உறுதி மொழி கொடுப்பவருக்கே எங்கள் வாக்கு என்பதை குறித்து வைக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
RAJA - Rio de janerio,பிரேசில்
31-மார்-201103:44:31 IST Report Abuse
RAJA போர்டு மாட்டினீங்க..... வாழ்த்துக்கள். ஆனா ஓட்டு மறந்துடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
a. murugesan - chennai-74,இந்தியா
30-மார்-201120:49:48 IST Report Abuse
a. murugesan பாராட்டுவோம்! முதலில் தமிழக தேர்தல் ஆணையாளரை!! பேசாம தேர்தல் ஆணையரையே அடுத்த அஞ்சு வருஷத்துக்கு தமிழ் நாட்டை ஆட்சி செய்ய சொல்லிரலாமே.. அதுக்கு சட்டத்துல இடம் இருக்கானு பார்த்து சொல்லுங்கப்பா.. அரசியல் கட்சிகள் எல்லாம் அப்புறம் திருந்தி வருதான்னு பார்ப்போம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X