அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

Added : மார் 31, 2011 | கருத்துகள் (30)
Advertisement
எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

சென்னை: ""எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.


சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பது கட்சி விரோத செயல். தேர்தல் நேரத்தில் தொண்டர்களை குழப்புவது நல்லதல்ல. தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் தங்களது கருத்துக்களை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம். உண்ணாவிரதம் இருந்தவர்களை, உள்ளே வருமாறு அழைத்தேன். இது என் பண்பாடு. கட்சி கட்டுப்பாட்டை நான் மதிக்கிறேன். கட்சியில் எனக்கென்று தனி சிறப்பு உண்டு. இரண்டு முறை தலைவர் பதவியும், பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.


நான் எந்த வேட்பாளரையும் மாற்றவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மேலிடம் எடுத்த முடிவு. மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரையும் காங்கிரசார் ஆதரிக்க வேண்டும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகியுள்ளேன். இது விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. எனக்கு கட்சி தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்வேன். தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. நான் விரும்பியிருந்தால் சோனியாவிடம் ஏதாவது ஒரு தொகுதியை கொடுங்கள் என கேட்டிருப்பேன். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
netrikan - Detroit,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201100:03:45 IST Report Abuse
netrikan ஹா ஹா தங்கபாலு சார், பாத்து பிரச்சாரத்துக்கு போங்க, எதிர் பாராம உங்க வேஷ்டிய உருவணும்னு உங்க கட்சிக்காரனே எதிர்பார்த்து ரெடியா இருக்கானாம். உம் பாடு கஷ்டம்டி ஹா ஹா
Rate this:
Share this comment
Cancel
sathyam - sivakasi,இந்தியா
01-ஏப்-201111:15:00 IST Report Abuse
sathyam இந்த தேர்தலின் சூப்பர் காமெடி இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
01-ஏப்-201110:18:59 IST Report Abuse
T.R.Radhakrishnan ஆனால் எல்லோரும் எதிர்பார்க்கும் விதமாக, மக்கள் உன் டெபாசிட்டை காலி செய்ய போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X