பொது செய்தி

இந்தியா

உலககோப்பை இந்தியா வெல்லும்: ஜோதிடர்கள் நம்பிக்கை

Added : ஏப் 02, 2011 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: மும்பையில் இன்று நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என ஜோதிடர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மும்பை வாங்டே மைதானத்தில் இன்று மாலை இந்தியா-இலங்கை இடையே உலக கோப்பைக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் யார் கோப்பையை வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிகத்துள்ளது.இந்நிலையில் அஜய் பாம்பி என்ற ஜோதிடர் தோனியின் ஜாதகத்தை கணித்துள்ளார் அதன்படி 30 வயதாகும் தோனிக்கு ராசி: கன்னிராசியாகும். இந்தராசியில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் கேது கிரகங்கள் நன்மைதருவதாக உள்ளதாகவும், இதுபோன்ற கிரக அமைப்பு கடந்த 29-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் போது இருந்ததால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. அதேபோன்ற கிரக அமைப்பு இன்றும் உள்ளதால் இந்தியா கோப்பையை எளிதாக பெறும் என அவர் தெரிவித்தார். இவரைப்போல் மற்ற பெரும்பாலான ஜோதிடர்களும் இந்தியா வெல்லும் என்றே கணித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vicky Heart Rider - Coimbatore,இந்தியா
02-ஏப்-201111:34:10 IST Report Abuse
Vicky Heart Rider ஆக்டோபஸ் சொன்னா மட்டும் ஒத்துக்குவீங்களா..........
Rate this:
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
02-ஏப்-201111:25:37 IST Report Abuse
ngopalsami என்னையா ஜோசியரே, கன்னி ராசிகாரங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசியில் இருந்து ஏழரை நாட்டு சனி நடப்பது தெரியாதா உனக்கு. தோனி ஜாதகம் மாத்திரம் சரியாய் இருந்தா போதுமா? மத்தவங்கெல்லாம் என்னாவது? கிரிகெட்டுல எத்தன பேர் ஆடறாங்க தெரியுமா? எதுக்கையா புருடா விட்டு ஜனங்கள ஏமாத்துறீங்க. பாகிஸ்தான் கூட ஆடி மிக சுலபமா ஜெயிசாங்களா? சுலபமா பிடிக்க வேண்டிய கேட்ச்கள கோட்டை விட்டாங்க அவங்க. சரியா அவங்க ஆடி இருந்தா நம்ம கதி என்னான்னு தெரியுமா ஜோசியரே. புருடா எது எதுக்கு விடனுமோ அதுக்குதான் விடனும்.
Rate this:
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
02-ஏப்-201110:50:15 IST Report Abuse
K.vijayaragavan பொது விஷயங்களில், வெகு ஜன அபிப்ராயத்தை தங்கள் கணிப்புகளாக கூறுவதே இவர்களின் ஜோதிட லட்சணம். சொன்னது நடக்கா விட்டால் அப்படியே பல்டி. அரசியல் வாதிகளையே மிஞ்சியவர்கள் இவர்கள். இவர்களை சொல்லி புண்ணியமில்லை. இவர்களை மகான்கள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் பத்திரிகைகளை சொல்ல வேண்டும். தாங்கள் சொல்வதை கணிப்புகளாக சொல்ல வைப்பதும் பத்திரிக்கை தர்மமாகி விட்டது.எதுவும் நடந்த பின் தான் ஊர்ஜிதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X