பொது செய்தி

இந்தியா

ஊழலை ஒழிக்க லோக்பால் தேவை: காந்தியவாதி ஹசாரே உண்ணாவிரதம்

Added : ஏப் 05, 2011 | கருத்துகள் (9)
Advertisement
ஊழலை ஒழிக்க லோக்பால் தேவை: காந்தியவாதி ஹசாரே உண்ணாவிரதம்

புதுடில்லி: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவக்கினார்.


உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், "ஜன லோக்பால்' அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், "இந்தியா கேட்' பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.


முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், "என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார்? ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்' என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், "சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை' என்றார். அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pillai - Doha,கத்தார்
06-ஏப்-201119:59:54 IST Report Abuse
Pillai இவருக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. நான் வெளி நாட்டில் இருப்பதால் இந்த உண்ணா விரதத்தில் பங்கு கொள்ள முடியவில்லை என்பதில் சங்கடம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
santhosh - mangalore,இந்தியா
06-ஏப்-201117:28:05 IST Report Abuse
santhosh சுப்பிரமணிய சுவாமியை அதன் தலைவராக போடுங்கள்.சூப்பராக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
sivaguru - chennai,இந்தியா
06-ஏப்-201116:10:59 IST Report Abuse
sivaguru தமிழ் நாட்டுக்கு வாங்க ஐயா. நீங்களே உங்க கொள்கைய மறந்துடுவிங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X