ரபேல் விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன?

Updated : பிப் 08, 2019 | Added : பிப் 08, 2019 | கருத்துகள் (49)
Advertisement

புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் அவசரமாக தேவைப்பட்டதால் தான், அதற்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்த, பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.இதை பார்லிமென்டிலும் பொது மேடைகளிலும் பிரதமர் மோடி பல முறை கூறி உள்ளாரே என பா.ஜ.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.




ஒரு பகுதி குறிப்பு

பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பின் ஒரு பகுதியை மட்டும் ஒரு நாளிதழ் வெளியிட்டதால் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அதிகமாக பேச வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் தான், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், இப்பிரச்னையில் பரீக்கரின் பதிலும் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும் எனக்கூறி உள்ளார்.


உண்மை நிலவரம்

அந்த நாளிதழில், அரசு குறிப்பை மேற்கோள் காட்டி, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டிருக்கும்போது, பிரதமர் அலுவலகமும் அதற்கு இணையாக, பிரான்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனால். இந்தியாவின் நிலை பலவீனப்பட்டது எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த குறிப்பை பாதுகாப்பு துறை துணை செயலராக இருந்த எஸ்.கே.சர்மா தயாரித்து உள்ளார். இதில் பாதுகாப்பு செயலராக இருந்த ஜி.மோகன் குமார் குறிப்பு எழுதுகையில், "நமது நிலைப்பாட்டை பெரிதும் பாதிப்பதால், பேச்சு நடத்துவதை பிரதமர் அலுவலகம் தவிர்க்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.




ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தடையை நீக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.



இதையடுத்து, ரபேல் விவகாரத்தில், ஒப்பந்த உறுதிமொழி, வங்கி உத்தரவாதம் ஆகியவற்றை தவிர்க்கும்படி பாதுகாப்பு அமைச்சராக இருந்த பரீக்கரை தோவல் கேட்டு கொண்டார். இதனை அலுவலக குறிப்பிலும் பரீக்கர் குறிப்பிட்டு உள்ளார்.



பிரதமர் அலுவலகம் தலையீடு காரணமாக தான், ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தடை நீங்குவதில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், இது அமைச்சகங்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இதில் நடைமுறை தவறுகள் இல்லை. பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல் ஆயுதம் வாங்க பணம் செலுத்தலாம் என்பதால், போர் விமானம் விலை குறையும் குறையும் வாய்ப்பு கிடைத்தது.

ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பேச்சுவார்த்தை குழு, பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகே ஒப்பந்தத்தை ஏற்று கொண்டது எனக்கூறப்பட்டு உள்ளது.


குறிப்பில் உள்ளது என்ன?


2015ல் மோகன் குமார் எழுதிய அந்த குறிப்பில், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் முடிவில், நம்பிக்கை இல்லை என்றால், பிரதமர் அலுவலகம் தலையிடலாம்.பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பேச்சுவார்த்தை குழு எடுத்த நிலைப்பாட்டிற்கு, பிரதமர் அலுவலகத்தின் நிலை மாறுபாடாக உள்ளது. இது நமது நிலையை பாதிப்பதால், பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என எழுதினார். இது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் பரீக்கர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.




இந்த குறிப்பிற்கு பரீக்கர் பதில் அளித்துள்ளார். அவர் தனது குறிப்பில், ஒப்பந்தத்தில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிபர் அலுவலகமும் கவனித்து வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிருப்தி குறிப்பு மிகைப்படுத்தப்பட்டது என்றார்.


2016ல் பிரான்ஸ் பிரதமராக இருந்த மானுவேல் வால்ஸ், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தில் தங்கள் நாட்டு நிறுவனம் அளித்த வாக்குறுதிகளுக்கு தங்கள் அரசு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருந்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக இருந்த அப்போதைய ஏர் மார்ஷல் எஸ்.பி.பி.சின்ஹா கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம் செய்த சிறப்பான ஒப்பந்தத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் குறிப்பு எழுதப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த குறிப்பை, பேச்சுவார்த்தை குழு எழுதவில்லை. எஸ்.கே.சர்மா தான் எழுதினார். சர்மா பேச்சுவார்த்தை குழுவிலேயே இடம் பெறவில்லை. யாருக்காக இந்த குறிப்பை அவர் எழுதி வைத்தார். பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் தலையிடவில்லை என்பதை, உறுதியாக கூற முடியும் என்றார்.
அந்த குறிப்பில் கையெழுத்திட்ட மோகன்குமார் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்த மறுப்பு அறிக்கைக்கும் விலை விவகாரத்திற்கும் தொடர்பில்லை. இது பேச்சுவார்த்தைக்கு உத்தரவாதம் அளித்தது என்கிறார்.
காங்கிரஸ் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகிறது. ‛‛பிரதமர் அலுவலக தலையீடு பற்றி பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டதும், இதற்கு பரீக்கர் தனது பதிலில் மறுப்பு தெரிவிக்காததும் பல்வேறு விடையளிக்காத கேள்விகளை எழுப்பி உள்ளதாக'' காங்., கூறி வருகிறது. ஆனால், போர் விமான கொள்முதலை காங்கிரசை போல் தனது அரசு தாமதபடுத்தாது என்பதில் மோடி தெளிவாக இருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-பிப்-201904:34:26 IST Report Abuse
meenakshisundaram 'உண்மையிலே நடந்தது என்னன்னா " மதுரை வீரன் T S பாலையா காமெடியை பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
11-பிப்-201912:30:52 IST Report Abuse
ravichandran மோடி சர்வ வல்லமை படைத்தவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர் எடுக்கும் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் அதுக்குமேல ஒன்னும் இல்ல
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
09-பிப்-201916:36:42 IST Report Abuse
ramanathan இன்று நடக்கும் ஊழலுக்கும் அதிகார துஷ் பிரயோகத்திற்கும் வேலைவாய்ப்பின்மை பசி பட்டினிச் சாவுகள் சட்டத்தை மக்கள் மதிக்காமை சட்டத்தை மக்களே கையில் எடுத்துக் கொள்வது. என்ற எல்லாவற்றுக்கும் நேரு குடும்பத்தின் சுயநலம். இதெல்லாம் கூட நாம் குறைசொல்லலாம் .ஆனால் மோடி தவறு செய்தார் ஊழல் செய்தார் என்று சொன்னால் தாயின் கருவில் இருக்கும் அந்த சிசு கூட நம்பாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X