Virender Sehwag offers to take care of education of Pulwama terror attack martyrs' children | வீர மரணமடைந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவை நான் ஏற்கிறேன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீர மரணமடைந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவை நான் ஏற்கிறேன்

Added : பிப் 16, 2019 | கருத்துகள் (18)
Advertisement
வீர மரணமடைந்தவர்களின், குழந்தைகள், கல்வி செலவை, நான், ஏற்கிறேன்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.




இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வீர மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் சேவாக் கூறியது, வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது சேவாக் சர்வதேச பள்ளியில் அக்குழந்தைகளை படிக்க வைக்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சேவாக்கின் அறிவிப்பை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
இவரை தொடர்ந்து குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், தனது ஒருமாத ஊதியத்தை வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.





வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugan - tamil nadu,இந்தியா
17-பிப்-201909:41:07 IST Report Abuse
murugan விரேந்தர் சேவாக் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்
Rate this:
Share this comment
Cancel
murugan - tamil nadu,இந்தியா
17-பிப்-201909:37:45 IST Report Abuse
murugan கிரேட் சேவாக்
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201909:32:30 IST Report Abuse
VIJAIAN C Super G,ur a HERO!!!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X