'காந்தியின் சிந்தனைகளுக்கு விரோதமாக செயல்படுவதா?' Dinamalar
பதிவு செய்த நாள் :
'காந்தியின் சிந்தனைகளுக்கு
விரோதமாக செயல்படுவதா?'

புதுடில்லி: ''மஹாத்மா காந்தியின் சிந்தனைகளுக்கு விரோதமாக செயல்படும் கட்சி, காங்கிரஸ்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி,Modi,PM,காந்தி சிந்தனை,ராகுல்



சுதந்திர போராட்டத்தின்போது, உப்பு சத்தியாகிரக யாத்திரையை, 1930, மார்ச், 12ல், மஹாத்மா காந்தி துவக்கினார். இந்த யாத்திரையின், 89ம் ஆண்டு நிறைவு தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.


இதையொட்டி, சமூக வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: மஹாத்மா காந்தி மேற்கொண்ட உப்பு சத்தியாகிரக யாத்திரையை, திட்டமிட்டு நடத்தியவர், சர்தார் படேல். இதை அறிந்துதான், படேலை,

யாத்திரை துவங்கவதற்கு சில நாட்களுக்கு முன், ஆங்கிலேய அரசு கைது செய்தது. ஆனாலும், படேல் திட்டமிட்டபடியே, யாத்திரை வெற்றிகரமாக நடந்தது.


மஹாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ், சுதந்திரத்துக்கு பின், அவரது சிந்தனைகளுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது.'சுதந்திர இந்தியாவில், ஜாதி வேறுபாடு, தீண்டாமை என்ற பேச்சுக்கே இடமிருக்க கூடாது' என, காந்தி விரும்பினார். அரசியல் லாபத்துக்காக, மக்களிடம் ஜாதி வேறுபாட்டை துாண்டியது காங்கிரஸ்.


'சிறந்த மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை அளித்து, இந்தியாவின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்' என, காந்தி வலியுறுத்தினார். தற்போது, ஊழலும், நிர்வாகமின்மையும், காங்கிரசின் இரு பக்கங்களாக மாறிவிட்டன. காங்., ஆட்சியில், ஊழல் நடக்காத துறையே இல்லை.


வாரிசு அரசியலை, காந்தி முழுமையாக வெறுத்தார். ஆனால், வாரிசு அரசியலைத்

Advertisement

தான், காங்கிரஸ், முக்கிய நோக்கமாக வைத்துள்ளது. இதை முன்பே அறிந்துதான், 'சுதந்திரம் பெற்றவுடன், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும்' என, காந்தி கூறினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.


மஹாத்மா காந்தியின் சிந்தனைகளை நோக்கமாக வைத்து, ஐந்து ஆண்டாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஊழல் பேர்வழிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க, காங்., தலைவர்கள் சிலர், முன், 'ஜாமின்' பெற, நீதிமன்ற படிகளில் ஏறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மார்-201907:45:49 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்புகழஞ்சலி செலுத்துறாய்ங்க..

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மார்-201904:28:16 IST Report Abuse

J.V. Iyerமோடிஜி அவர்களே நல்லா வெளுத்து வாங்குங்கள். என்ன சொன்னாலும் கான்-கிராஸுக்கு வெட்கம், மானம், எல்லாம் கிடையாது. அவர்களுக்கு தேவை அதிகாரகம், பதவி. முன்பே தீமுக்கவுடன் சேர்ந்து பணம் நிறைய சேர்த்து விட்டார்கள்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-மார்-201916:13:28 IST Report Abuse

Endrum Indianகாந்தியின் அனைத்து சத்தியாகிரகங்களும் முஸ்லீம் சப்போர்ட்டாகத்தானிருந்தது, முஸ்லீம் நேருவை (3 /17 ) பிரதமந்திரியாக்கிய வரை சர்தார் படேலை செய்யாமல் , காங்கிரஸ் கமிட்டியின் 14 /17 ஒட்டு அவர் பக்கமிருந்தும். ஆகவே முஸ்லீம் நேரு இத்தாலிய பப்பு ரவுல் வின்சி காங்கிரஸ் அதில் குளிர் காய்கின்றது. ஆகவே இனிமேலும் காந்தி என்று சொல்லவேண்டாம், படேல் என்று சொல்லுங்கள் போதும்.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X