மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் அம்மனையும், சுவாமியையும் மதுரை மேலமாசிவீதி - நேதாஜி ரோடு சந்திப்பில் பூமழை தூவி அந்தரத்தில் பறந்து பறந்து இரு பொம்மைகள் வரவேற்கும். இது சிலருக்கு விளையாட்டாக தெரிந்தாலும், இதிலும் ஐதீகம் மறைந்திருக்கிறது. வேதங்களில் மானுடம், ராட்சசன், தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், வானரர்கள் என 7 வர்க்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில், கந்தர்வர்கள் என்பவர்கள், மானுடர்களுக்கும், தெய்வங்களுக்கும் தொடர்பாளர்களாக இருப்பவர்கள். கின்னரர்கள் என்பவர்கள் தேவர்களின் படைவீரர்கள். கிம்புருஷர்கள் என்பவர்கள் ரிஷிகள், வானரர்கள் என்பவர்கள் மனிதர்களின் ஆதிநிலையை குறிப்பிடுபவர்கள். மனிதர்கள் சார்பில், இறைவனுக்கு மாலை அணிவிக்கும் வகையில்தான், கந்தர்வர்கள் என்றழைக்கப்படுவதுதான் அந்த பொம்மைகள். புராணகாலம், சுவாமி, அம்மன் தொடர்பான ஓவியங்களில் இந்த பொம்மைகள் மாலையுடன் பறப்பது போல் இருப்பதை பார்த்திருப்போம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE