பொது செய்தி

தமிழ்நாடு

இதுவரை இல்லாத அளவு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஆர்வமாக திரண்டு வந்தனர் மக்கள்

Updated : ஏப் 13, 2011 | Added : ஏப் 13, 2011 | கருத்துகள் (30)
Share
Advertisement

சென்னை:தமிழகத்தின் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கவுள்ள சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மாநிலம் முழுவதும் ஆர்வத்துடன் திரண்டு வந்து பொதுமக்கள் ஓட்டளித்தனர். பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் இன்றி, அமைதியாக தேர்தல் நடந்ததால், முதன் முறையாக ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக உயர்ந்தது.


தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நேரத்திற்கு முன்பாகவே, வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்திருந்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சில ஓட்டுப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக தாமதம் ஏற்பட்டது.சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்த வண்ணம் இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.தேர்தல் கமிஷன் மூலம், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, கட்சிகள் சார்பிலும் பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்ததால், வாக்காளர்கள் இதை எடுத்து வந்து எளிதாக ஓட்டுப்பதிவு செய்தனர்.சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட, அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டளித்தனர். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக ம.தி.மு.க., அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார். மாநில காவல்துறையோடு இணைந்து, துணை ராணுவப்படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் என, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பதட்டமான தொகுதிகள் என, அடையாளம் காட்டப்பட்டு இருந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக வந்த புகாரையடுத்து, துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சேலத்தில் போலீசார் தாக்கியதில் அ.தி.மு.க., தொண்டர் இறந்ததாக புகார் எழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஓட்டுப்பதிவின் போது குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.ஓட்டுப்பதிவை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தேர்தல் அதிகாரிகள் கண்காணித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஓட்டுச்சாவடிகளில் தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் தராத வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களின் செயல்பாடு அமைந்திருந்தது.


தமிழக டி.ஜி.பி., போலோநாத் கூறும்போது, "தமிழகம் முழுவதும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. பெரிய அளவிலான புகார்கள் ஏதும் வரவில்லை. ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு அளித்தனர்' என்றார்.


மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையிலும், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்தவர்களுக்கு, "டோக்கன்' வழங்கப்பட்டு, ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், "சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.வன்முறை, மோதல்கள், ஓட்டுச்சாவடி கைப்பற்றல் போன்ற பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததால், ஓட்டுப்பதிவு 75 முதல் 80 சதவீதமாக உயர்ந்தது என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.


ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம் முதல், மாலை வரை பொதுமக்கள் ஆர்வத்தோடு ஓட்டுச்சாவடிக்கு அலை அலையாய் வந்து ஓட்டளித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் யாருக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல், அரசியல் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம்


2006 சட்டசபை தேர்தல்


மொத்த வாக்காளர்கள்:
ஆண்கள் - 2,31,13,794
பெண்கள் - 2,34,89,558
மொத்தம் - 4,66,03,352
ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள் - 1,67,35,616
பெண்கள் - 1,61,50,033

ஓட்டு சதவீதம்:


ஆண்கள் - 72.41%
பெண்கள் - 68.75%
மொத்தம் - 70.82%
செல்லும் ஓட்டுகள் - 3,29,91,555
செல்லாத ஓட்டுகள் - 5,828 (மொத்த ஓட்டில் 0.02% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் - 51,450


2001 சட்டசபை தேர்தல்


மொத்த வாக்காளர்கள்:


ஆண்கள் - 2,38,54,950
பெண்கள் - 2,36,24,050
மொத்தம் - 4,74,79,000


ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள் - 1,46,22,260
பெண்கள் - 1,34,25,817


ஓட்டு சதவீதம்:


ஆண்கள் - 61.30%
பெண்கள் - 56.83%
மொத்தம் - 59.07%
செல்லும் ஓட்டுகள் - 2,80,37,314
செல்லாத ஓட்டுகள் - 6,637 (மொத்த ஓட்டில் 0.02% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் - 54,907


1996 சட்டசபை தேர்தல்


மொத்த வாக்காளர்கள்:


ஆண்கள் - 2,14,05,752
பெண்கள் - 2,10,73,213
மொத்தம் - 4,24,78,965


ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள் - 1,47,88,077
பெண்கள் - 1,36,51,172


ஓட்டு சதவீதம்:


ஆண்கள் - 69.08%
பெண்கள் - 64.78%
மொத்தம் - 66.95%
செல்லும் ஓட்டுகள் - 2,71,54,721
செல்லாத ஓட்டுகள் - 12,81,987 (மொத்த ஓட்டில் 4.51% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் - 54,789


1991 சட்டசபை தேர்தல்


மொத்த வாக்காளர்கள்:
ஆண்கள் - 2,02,09,586
பெண்கள் - 1,96,99,201
மொத்தம் - 3,99,08,787


ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள்- 1,33,27,036
பெண்கள் - 1,21,51,608


ஓட்டு சதவீதம்:
ஆண்கள் - 65.94%
பெண்கள்- 61.69%
மொத்தம்- 63.84%
செல்லும் ஓட்டுகள் - 2,46,49,408
செல்லாத ஓட்டுகள் - 8,25,567 (மொத்த ஓட்டில் 3.24% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் - 43,000


கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான ஓட்டு சதவீதம்


2001 சட்டசபை :59.07
2004 லோக்சபா : 60.81
2006 சட்டசபை :70.81
2009 லோக்சபா :68


Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - coimbatore,இந்தியா
14-ஏப்-201112:21:31 IST Report Abuse
Tamil Selvan ஒட்டு சதவிகிதம் அதிகரிக்க காரணம் வாக்காளர்கள் பட்டியல் பல முறை சரி பார்க்கபட்டு தேவையில்லா பெயர்கள் நீக்கப்பட்டது ஆகும். தேர்தல் கமிஷன் நடை முறை பொது மக்களை கவர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அனைத்து கட்சிகளும் தேர்தல் கமிஷன் இந்த அளவு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என எதிபார்கவில்லை. இது ஒரு நல்ல தொடக்கம். தமிழ் செல்வன்
Rate this:
Cancel
sriramulu - mangalampet,இந்தியா
14-ஏப்-201112:00:22 IST Report Abuse
sriramulu அதிக வாக்கு பதிவிற்கு மக்களின் ஆர்வம் காரணம் இல்லை. அரசியல் வாதிகளின் கவனிப்பே காரணம். மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை.. வாக்கு பதிவு அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன். தேர்தல் ஒரு அரசியல் சூதாட்டம். நான் பணியாற்றிய வாக்குசாவடியின் முகவர் மிரட்டலில் போதிய பாதுகாப்பின்மையால் நேர்மையுடன் செயல்படமுடியவில்லை. 9 மணி நேர இடைவிடாத வாக்குபதிவு. உணவு இடைவெளி இல்லை.எப்படி முடியும் 540 நிமிடம். ஆனால் 990 மேற்பட்ட வாக்குகள்.வாக்குபதிவு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வாக்குபதிவிற்கு பின் பெட்டி எடுத்தவுடன் வாக்கு பதிவு அதிகாரிகளின் நிலை அம்போ. திரும்ப போதிய வசதி செய்யபட வேண்டும். உள் கிராமங்களில் ஒப்புக்கு பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. நேர்மையுடன் செயல்படமுடியவில்லை. படிப்பறிவு இல்லாதவர்கள், பெற்ற இனாமிற்காக தான் வாக்களின்றார்கள். சுயமாக் சிந்தித்து வாக்களிப்பது இல்லை. சில இடத்தில் படித்தவர்களும் அப்படித்தான். ௦௦ ௦ ௦
Rate this:
Cancel
venkatesan marimuthu - jeddah,சவுதி அரேபியா
14-ஏப்-201111:53:09 IST Report Abuse
venkatesan marimuthu இனி வரும் தேர்தல்களின் போது, தேர்தல் நாள் குறித்தவுடன் அரசாலும் கட்சி பதவிலிருந்து இறங்கி விடவேண்டும். தேர்தல் முடியும் வரை ப்ரெசிடென்ட் ரூல் அமுலில் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X