இந்தியா

ஹசாரே சொத்து விவரம் இன்று அறிவிப்பு

Added : ஏப் 15, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் தரப்பில் இடம் பெற்றுள்ள அன்னா ஹசாரே உள்ளிட்ட ஐந்து பேரும், தங்களின் சொத்து பற்றிய விவரங்களை இன்று வெளியிட உள்ளனர்.ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வகை செய்யும், லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில், அரசு தரப்பில் ஐந்து பேரும், பொதுமக்கள் தரப்பில் ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் முதல் கூட்டம், டில்லியில் நாளை நடக்கிறது.இந்நிலையில், ஊழலுக்கு எதிரான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் பிரதிநிதிகளாக அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த் பூஷன், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், ஐந்து பேரும், வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்றும் வகையில், தங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விவரங்களை நாளை (இன்று) வெளியிடவுள்ளனர்' என்றார்.இதற்கிடையே, அன்னா ஹசாரே கூறுகையில், "ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் வரமாட்டார்கள். அவர்களை, லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர முடியாது' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVI.A. - SALEM,இந்தியா
15-ஏப்-201112:02:23 IST Report Abuse
RAVI.A. உண்ணா விரதம் இருந்ததை விட அன்னா ஹசாரே அவர்களுக்கு இது மிகவும் கடினமான செயல்..... அவர்,அவரது முயற்சியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
15-ஏப்-201109:28:02 IST Report Abuse
Ramesh Rajendiran இன்றைய NEW INDIAN எக்ஸ்பிரஸ் நாளிதழின் படி, இன்றைய நிலவரப்படி இவரது அமைப்புக்கு நன்கொடியாக ரூ.8287668 வந்துள்ளது. இதுவரை இந்த் அமைப்பு ரூ.5017768 சிலவு செய்துள்ளது, அதாவது ஏறக்குறைய தினசரி ரூ 200000 சிலவு செய்து இருக்கிறர்கள். மத்திய அரசுக்கு இணையான சிலவுகளை இந்த வெளிநபர் குழு செய்து உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X