பொது செய்தி

இந்தியா

வரி மோசடி அலிக்கு உதவிய கவர்னர் ராஜினாமா?அமலாக்க பிரிவு சம்மனுக்கு தப்பினார்

Updated : ஏப் 19, 2011 | Added : ஏப் 17, 2011 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: ""வரி மோசடி செய்ததொழிலதிபர் ஹசன் அலி,பாஸ்போர்ட் பெற உதவியவிவகாரம் தொடர்பாக, பதவிவிலகும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டால், பதவி விலகத் தயார்,'' என, புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கவர்னர்பதவியில் இருப்பவருக்கு சம்மன் எதையும் அனுப்பக் கூடாது என, அமலாக்கத் துறையை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.


ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் இருக்கும் தொழிலதிபரும், குதிரைப் பண்ணை உரிமையாளருமான ஹசன் அலி, பாஸ்போர்ட் வாங்குவதற்கு, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் இக்பால் சிங் மற்றும் உ.பி., முதன்மை செயலர் விஜய்சங்கர் பாண்டே ஆகியோர் உதவியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, கவர்னர் இக்பால் சிங், கடிதம் ஒன்றை


அனுப்பினார். அதில், "பாஸ்போர்ட்டிற்காக ஹசன் அலியின் பெயரை நான் பரிந்துரை செய்தேன். பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான அமலேந்து பாண்டேயின் வேண்டுகோளின்படி, 1997, ஏப்ரல் 4ம் தேதி இதைச் செய்தேன்."ஹசன் அலிக்கு மிகவும் மோசமான உடல் நலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், பரிந்துரை செய்தேன். ஹசன் அலியை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவரை ஒரு போதும் நான் சந்தித்ததில்லை. ஹசன்அலியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் நான் சரிபார்க்கவில்லை' என, தெரிவித்திருந்தார்.


மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்தும், இந்த விளக்கத்தை அளித்தார்.இதற்கிடையில், ஹசன் அலி விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் இக்பால் சிங், உ.பி., முதன்மை செயலர் விஜய் சங்கர் பாண்டேஆகியோரிடம் விசாரணைநடத்துவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத் துறை அனுமதி கோரியது.அதே நேரத்தில், இக்பால்சிங்கிடம் விசாரணை நடத்த, அமலாக்கத் துறை, அவருக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும், அவர் இன்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என,தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், இக்பால் சிங் விவகாரம் தொடர்பாக, அமலாக்க துறைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளது.


அதில், "கவர்னர் பதவியில் இருக்கும் ஒருவரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப முடியாது' என, கூறப்பட்டது.இதனால், கவர்னர் இக்பால்சிங் ராஜினாமா செய்யும் வரை அல்லது அவரை மத்திய உள்துறை
அமைச்சகம் திரும்ப அழைக்கும்வரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பதவி விலகத் தயார்: ""மத்திய அரசு கேட்டுக் கொண்டால், பதவி விலகத் தயார்,'' என, புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் கூறியுள்ளார். இதனால், அவர் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:எந்த ஒரு அமைப்பும்,என்னிடம் எந்த விதமானவிசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளேன். பதவி விலகும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டால், அதையும் செய்யத் தயார். ஆனால், என்னை பதவி விலகும்படி இதுவரை யாரும் கேட்கவில்லை.அமலாக்கத்துறையோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்போ, விசாரணை தொடர்பாக என்னை முறைப்படி அணுகவில்லை. அப்படி அவர்கள் என்னிடம் விசாரணைக்கு வந்தால், முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி, பரிந்துரை செய்த விஷயம் தொடர்பாக, நான்ஏற்கனவே என் நிலையை தெளிவுபடுத்திவிட்டேன். ஹசன் அலிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது.என் மன சாட்சி தெளிவாக உள்ளது. நான் தவறு எதையும் செய்யவில்லை.இவ்வாறு இக்பால்சிங் கூறினார்.


அ.தி.மு.க., கோரிக்கை: "2009ல் புதுச்சேரி கவர்னராக பதவியேற்றது முதல், பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கும் கவர்னர் இக்பால்சிங்கை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., கேட்டுக் கொண்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varusai Ibrahim - penang,மலேஷியா
18-ஏப்-201119:01:36 IST Report Abuse
Varusai Ibrahim தவறுசெய்தவர்கள் ,செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டித்தே ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
B.Madhavan, N.G.O. WING, B.J.P. - chennai ,இந்தியா
18-ஏப்-201115:08:31 IST Report Abuse
B.Madhavan,   N.G.O. WING, B.J.P. எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் தனது கடமையை திறமையாக செய்யும் தமிழக ஆளுநருக்கு ஏன் ஓய்வு கொடுக்கக் கூடாது? ப. மாதவன்
Rate this:
Share this comment
Cancel
viki pasupathy - Hyderabad,இந்தியா
18-ஏப்-201110:56:17 IST Report Abuse
viki pasupathy How can you recommend the issuance of Passport for the person whom you have not met even once, of whom you have no idea , just because some one else recommended his name. Did you verify what was his ailment and why he could not be cured in the country? What happens if a terrorist or an international criminal gets a passport like this. Will you wash off your hands. It took special efforts to get a passport on priority for a greived parents to visit a foregn country to see their son who was killed due to racial hatred. Here we have a Governor recommending issue of passport to dubious business man who has amassed wealth disproprtionate even for imagination.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393