பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்

Added : ஏப் 25, 2011 | கருத்துகள் (59) | |
Advertisement
புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும்
IOC, plan, hike, petrol, price,Rs.70,பெட்ரோல், விலை, லிட்டர், ரூ.70,

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.


பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.


தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரே போய் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இதை தள்ளிப்போடும்படி மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக, நிறுவனங்கள், முடிவை தள்ளிப்போட்டு வந்தன.


இந்நிலையில், இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.


மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
virat kanna - erode,இந்தியா
29-ஏப்-201111:29:16 IST Report Abuse
virat kanna மகாத்மா காந்தி போல் ஆயிரம் மகாத்மாக்கள் உருவானால் மட்டுமே நாம் இந்த கொள்ளையர் களிடமிருந்து இந்தியாவை மீட்க முடியும். ஒவ்வொரு நாட்டின் அறுபது ஆண்டு கால வராலாற்றை எடுத்து பாருங்கள், அவர்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் இந்தியாவில் நிலைமை என்ன. இந்த கொள்ளையர்களை நம்மில் ஒருவர் நிச்சயம் வீழ்த்துவார். அந்த நல்லநாள் விரைவில் வர பிரார்த்திப்போம். youtube downloader, limewire
Rate this:
Cancel
thiyahoo_4600 - tiruppur,இந்தியா
29-ஏப்-201110:55:15 IST Report Abuse
thiyahoo_4600 மக்களே நாம எத்தனை தடவை சொன்னாலும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏறாது,எல்லாம் நம்ம தவறு. அவங்கள அரியணை ஏத்தி விட்டுட்டு புலம்புவதை விட மாற்று முடிவு தேவை. முடிவு நம் கையில் ,விடிவு பின் நாளில்......
Rate this:
Cancel
haris - pune,இந்தியா
27-ஏப்-201122:09:58 IST Report Abuse
haris HARIS petrol price in pakisthan rs 26 bangladesh rs 22 nepal rs 34 burma rs 30 afganisthan rs 36 qatar rs30 india rs 53,basic cost per liter RS16.50 CANTRE TAX RS 11.80 EXCISE DUTY 9.75 VAT CES 4.00TOTAL RS 50.05 NOW EXTRA 3 RUPEES GREAT JOP FRM GOVT PASS THIS MESSAGE TO ALL INDIANS
Rate this:
Jayachandran - coimbatore ,இந்தியா
28-ஏப்-201116:25:11 IST Report Abuse
JayachandranHi, I have given below the some countries petrol price list: Country Price Turkey Rs 114.50 per litre Eritrea Rs 114.03 per litre Norway Rs. 110 per litre Germany Rs 102.67 per litre Greece Rs 101.07 per litre Denmark Rs 100 per litre Sweden Rs 97.27 per litre The United Kingdom Rs 97.15 per litre The Netherlands Rs 95.25 per litre Hong Kong Rs 95.08 per litre singapore Rs.70.4 per litre Brazil (Sao Paolo) Rs 68.29 per litre Australia Rs 66.96 per litre SriLanka Rs 65.17 per litre India Rs 63 per litre China Rs 47.50 per litre Canada Rs 45.08 per litre The United States Rs 43.7 per litre Pakistan Rs 43.29 per litre Russia (Moscow) Rs 41.96 per litre Malaysia (Kuala Lumpur) Rs 26.78 per litre United Arab Emirates Rs 21.42 per litre Qatar Rs 10.46 per litre Kuwait Rs 9.63 per litre Bahrain Rs 9.51 per litre Turkmenistan Rs 8.55 per litre Saudi Arabia Rs 5.35 per litre Venezuela Rs 0.71 per litre Reference: http://www.gokulz.com/tag/petrol-prices-world-wide-2011 Regards, Jay...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X