அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் மசோதா நிராகரிப்பா; நிறுத்தி வைப்பா?

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (26)
Advertisement

சென்னை : நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதா ; நிறுத்திவைக்கப்பட்டதா? என்ற சர்ச்சை அரங்கேறி வருகிறது.








ஸ்டாலின் பேச்சு

இன்று (ஜூலை 10) சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், '' நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு கோரி, 2 மசோதாக்களை கடந்த 2017, பிப்ரவரி 1 ல் நிறைவேற்றினோம். அவற்றை மத்திய அரசுக்கும், ஜனாதிபதி ஒப்புதலுக்காகவும் அனுப்பினோம்.







நிராகரிப்பா ; நிறுத்திவைப்பா?


அதனை நிராகரித்திருப்பதாக, மத்திய அரசு 2017 செப்டம்பர் 22 அன்றே தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், நேற்று முன்தினம் சபையில் நடந்த விவாதத்தில், முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல, சட்டத்துறை அமைச்சர் சண்முகம், நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தவறான தகவலை கூறியுள்ளார். கடந்த 19 மாதங்களாக, அவையில் கடிதத்தை மறைத்து மக்களை ஏமாற்றிய தமிழக அரசின் சட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.






ராஜினாமா சவால் :


அதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், '' நான் எந்த தகவலையும் மறைக்கவில்லை, தவறான தகவலை அளிக்கவில்லை. இதை நிரூபித்தால் நான் பதவியை ராஜினமா செய்கிறேன். இல்லாவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா செய்வாரா?'' என்று கேள்வி எழுப்பினார்.


மத்திய அரசின் கடிதம் :


இதனால் சர்ச்சை ஏற்பட்டு, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய அரசின் கடிதத்தை வாசித்துக் காட்டி, இந்த தகவலை அவையில் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், 6 மாதகாலத்திற்குள் மீண்டும் மசோதாவை திருத்தி அனுப்பியிருக்கலாம். இப்போது அதற்கும் வழியில்லை. அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது,என்று குற்றம்சாட்டினார்.

ஆனால், மீண்டும் இதுகுறித்து தெரிவித்துள்ள சண்முகம், ''மசோதாக்கள் நிறுத்தித்தான் வைக்கப்பட்டுள்ளது, நிராகரிக்கப்படவில்லை,'' என்று கூறியுள்ளார்.


சர்ச்சை தீருமா?


இதனிடையே, தமிழகத்தின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜூலை-201907:23:03 IST Report Abuse
Nallavan Nallavan மத்த மாநிலத்து மாணவர்கள் நீட் எழுதுனா, அது அவங்க தலையெழுத்து ...... தமிழக மாணவர்கள் மட்டும் எழுதக் கூடாது ....... அட்மிஷன் கிடைச்சாலும் எந்தத் தேர்வும் எழுதாமையே டாக்டர் பட்டமும் குடுக்கணும் ......
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
11-ஜூலை-201911:24:05 IST Report Abuse
suresh kumar கனவு கண்டால் மட்டும் போதாது. அது மெய்ப்பட அதற்கான உழைப்பும் முயற்சியும் தேவை. பெரும்பாலான மாணவ மாணவியர், தங்கள் பெற்றோரை திருப்தி செய்வதற்காகவே நான் டாக்டராவேன் இன்ஜினியராவேன் என சொல்கிறார்கள். சண்டி மாட்டிற்கு சறுக்கியது சாக்கு.
Rate this:
Share this comment
Cancel
Jeya Veera Pandian - madurai,இந்தியா
11-ஜூலை-201900:00:49 IST Report Abuse
Jeya Veera Pandian சுடலே, படுத்துகிட்டு போத்தினா என்ன அல்லது போத்திகிட்டு படுத்தா என்ன. இங்க கட்டாயம் நீட் உண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X