ஸ்பெக்ட்ரம் ஊழல்: பொதுக்கணக்கு குழு அறிக்கை நிராகரிப்பு; காங்., - தி.மு.க., ஜெயித்தது

Updated : ஏப் 28, 2011 | Added : ஏப் 27, 2011 | கருத்துகள் (175)
Share
Advertisement
11 MPs demand rejection of draft PAC report, ஸ்பெக்ட்ரம் ஊழல்,பார்லி., பொதுக்கணக்கு குழு அறிக்கை முடக்கம்

ஆளும் காங்கிரஸ் , தி.மு.க., சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இணைந்து பார்லி., பொதுக்கணக்கு குழு அறிக்கையை நிராகரித்து விட்டனர். தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில் முரளி மனோகர் ஜோஷியின் இன்றைய அறிக்கைக்கு எதிராக 11 பேரும், ( காங்- தி.மு.க.,) ஆதரவாக 10 பேரும் ( பா.ஜ., இடதுசாரியினர் அ.தி.மு.க, ) ஓட்டளித்தனர். இதனால் இந்த அறிக்கை இன்று வெளியிட முடியாமல் போனது.


"பிரதமர் அலுவலகம் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றி இருக்க முடியும்' என, பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத் தகவல் வெளியானதால், ஏற்கனவே இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்று, அதனால் நெருக்கடியில் உள்ள தி.மு.க.,வுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பொதுக்கணக்கு குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, தனது விசாரணை அறிக்கையின் இறுதி நகல் சில மீடியாக்களுக்கு லீக் ஆகி விட்டது. இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படாவிட்டாலும் இதில் உள்ள விவரங்கள் தி.மு.க.,வுக்கும், மத்தியில் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை அதிகரிக்கச் செய்யும்.மொத்தம் 270 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை நகலின் ஒரு சில பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இது ரகசியமாகக் கசிந்திருக்கிறது, இந்த நிலையில், அவற்றில் தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தனக்கு சாதகமாக செயல்பட்ட ராஜாவை புகழ்ந்து, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தளவுக்கு அமைச்சரவை இலாகா ஒதுக்கீடுகளில் ஆர்வம் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பூஜ்யம் அளவு மட்டுமே நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய கபில் சிபலையும் விமர்சித்துள்ளது. அவரது பேச்சு பொறுப்பற்ற பேச்சு என்றும், நடைபெற்ற ஊழலை மூடிமறைக்கும் விதத்தில் அவர் நடந்து கொள்வதாகவும் கண்டித்துள்ளது.ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்கும் விஷயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், தொலைத்தொடர்பு இலாகாவிற்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களில் முக்கிய தவறுகள் நடைபெற்றுள்ளன.


பிரதமர் அலுவலகம் நினைத்திருந்தால் இந்த முறைகேட்டை தவிர்த்து இருக்க முடியும். பிரதமர் அலுவலகம் உரிய விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகளை தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றியிருக்க முடியும்.முக்கிய தகவல்களை பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரதமரிடம் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எவ்வாறு மேற்கொள்ளப்போகிறேன் என்பது குறித்து பிரதமருக்கு ராஜா எழுதிய கடிதத்தை, பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல, பிரதமர் அலுவலகம் தவறியுள்ளது.


இதனால், நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் பிரதமர் வெறுமனே வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை இருந்துள்ளது.தவறை தடுத்து நிறுத்த தவறியதன் மூலம், ராஜாவின் தவறான நடவடிக்கைக்கு பிரதமரும் மறைமுகமாக துணை போய் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. அதே போல, இந்த விஷயம் முடிந்த ஒன்று என்று அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் குறிப்பிட்ட தகவலும் இடம் பெற்றிருக்கிறது.


ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற நிர்வாக தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஊழலுக்கு முக்கியக் காரணமாக ராஜா இருந்தார் என்றும், அதே போல கனிமொழியும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சி.பி.ஐ., ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது. ஆகவே, பொதுக்கணக்கு குழுவும் தன்பங்குக்கு இதன் தீவிரத்தை அதிகரித்திருக்கிறது.


இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது, இதை ஏற்கப்போவதில்லை என்றும், இந்த அறிக்கை மீதான தங்களது எதிர்ப்பு கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு காங்கிரஸ் - தி.மு.க ., உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இன்று ( 28ம் தேதி) மாலை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்., உறுப்பினர்கள் 7 பேர், தி.மு.க., 2 பேர் சமாஜ்வாடி -1 , பகுஜன்சமாஜ்கட்சி -1 ஆக மொத்தம் 11 பேர் இந்த அறிக்கை வெளியிட மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் இந்த அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 21 உறுப்பினர்களிலல்11 பேர் அறிக்கைக்கு எதிராகவும், 10 பேர் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். ஆளும் அரசுக்கு ஆதரவான ஓட்டுக்கள் மட்டும் அதிகம் ( ஒரு ஓட்டு வித்தியாசம்) இருந்ததால் அறிக்கை வெளியிட முடியாமல் போனது.


நாளை (29ம் தேதி) பொதுக்கணக்கு குழு விசாரணை அறிக்கையை முறைப்படி சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கவும், ஜோஷி திட்டமிட்டிருந்தார். அதேபோல, காங்கிரஸ் - தி.மு.க., கூறுவதுபோல பலரையும் சம்மனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தால், இந்த குழுவின் காலக்கெடுவுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க இயலாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார். .


ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய இரண்டு தரப்புக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்த அறிக்கையை எப்படியும் நிறுத்தி வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், இன்று நடைபெற்ற பொதுக்கணக்கு குழுவில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளன.


பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவின் மொத்த உறுப்பினர்கள் 22 பேர். ஆனாலும், ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 21 இடங்கள் உள்ளது. இதில், லோக்சபாவில் இருந்து 15 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 6 பேரும் உள்ளனர். இதில் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தை வைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க., ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ., மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் அ.தி.மு.க., - இடதுசாரிகள் என அனைத்தும் சேர்த்து 9 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், குழுத் தலைவர் முரளிமனோகர் ஜோஷியும் அடக்கம். ஆக மொத்தம் 19. இது தவிர, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி சார்பிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆக இன்றைய கூட்டத்தில் தங்களுக்கு அதிக எண்ணிக்கை பலம் இருந்ததால், தற்போது முரளிமனோகர் ஜோஷி தயாரித்து வைத்திருக்கும் அறிக்கையை காங்கிரசும், தி.மு.க.,வும் நிறுத்தி வைத்து விட்டன.


-நமது டில்லி நிருபர்-


Advertisement
வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRISHNAMOORTHY Somangili Perumal - MADURAI,இந்தியா
29-ஏப்-201122:56:12 IST Report Abuse
KRISHNAMOORTHY Somangili Perumal 2 G ஸ்பெக்ட்ரம் ஊழலில் பூஜ்யம் அளவில் தான் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று கூறிய மந்திரி கபில் சிபிலையும் ,ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிந்து போன பிரச்சனை என்று அலட்சியமாக கூறிய மந்திரி ப.சிதம்பரத்தையும் ,ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் கண்டும் காணாமல் இருந்த பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் ,உச்ச நீதி மன்றம் குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும் .
Rate this:
Cancel
vaayaadi - chennai ,இந்தியா
29-ஏப்-201106:26:53 IST Report Abuse
vaayaadi நீங்க எத்தனை லோக்பால் சட்டம் கொண்டு வந்தாலும் நாங்க ஏக் போல் (ஒரு ஓட்டு) ல நிராகரிப்போம்.
Rate this:
Cancel
Ramesh Kumar - 69,London,E12 6NR,யுனைடெட் கிங்டம்
29-ஏப்-201100:46:30 IST Report Abuse
Ramesh Kumar இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் தொழில் அரசியல் என்பது அனைவரும் அறிந்ததே... அதற்க்கு சிறந்த முன் உதாரணம் அரசியல் மூத்த தலைவரும் திராவிட முன்னேற்ற கழக ( திருட்டுக்கு முன்னுதாரண கழக ) -த்தின் ஆணி வேரும் ஆன கலைஞர் மு.கருணாநிதி ஆவர் . தனது சிறுவயதிலேயே சென்னைக்கு (திருட்டு) ரயில் முலம் வந்திறங்கி தனது குடும்பத்தை ஆலமரம் போல் உருவாக்கி அதன் விழுதுக்கு குஞ்சம் கட்டுவதுபோல் தான் அரசியல் ஆச்சியில் ஈட்டிய வருமானத்தை தனது பெயரிலும் தனது குடும்பத்தாரின் பெயரிலும் சேர்த்துவருகிறார். உதாரணம் கலைஞர் டிவி -யில் அறுபது சதவிகித பங்கு மனைவி பெயரிலும் 20 சதவிகித பங்கு தனது மகள் பெயரிலும் மற்றொரு 20 சதவிகித பங்கு மூளையாக செயல் படும் சரத் என்பவரும் ஆவர் . அதுமட்டும் இல்லாமல் தனது கழக சொத்துகளையும் தனது சொத்துகளாக பாவித்து வருகிறார். அதற்கு சிறந்த முன் உதாரணம் அவரது குடும்ப நிறுவனம் கலைஞர் டிவி நிறுவபட்டிருப்பது கழகத்தின் சொத்தான அறிவாலயத்தில்...இதன் மூலம் நமது மக்களுக்கு நான் சொல்லவிரும்புவது என்ன வென்றால் தமிழக மக்களை மட்டுமல்லாமல் தனது கழக தோழர்களையும் எமற்றிவருகிறார் என்பதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X