பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நீர்நிலை, பாதுகாப்பு , மழை நீர், சேகரிப்புக்கு, 'மக்கள் இயக்கம்!'

சென்னை:தமிழகத்தில், நீர்நிலை பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு, மக்கள் இயக்கமாக மாறுகிறது. இதற்காக, கலெக்டர்கள் தலைமையில், மாவட்டம்தோறும் குழு அமைக்கப்பட்டு, தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக, சட்டசபையில், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். 'தினமலர்' நாளிதழில், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட, தொடர் விழிப்புணர்வு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக, இது கருதப்படுகிறது.
நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என்ற முழக்கம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளை துார்வார முன்வருவோரை ஊக்கப்படுத்தி, படத்துடன் செய்திகள் வெளியிட்டு, மக்களையும், தன்னார்வலர் களையும் பாராட்டி வருகிறது. அதற்கு கிடைத்த பலனாக, அரசாங்கமே, நீர்நிலை பாதுகாப்பை, மக்கள் இயக்கமாக மாற்ற முன்வந்துள்ளது.

இது தொடர்பாக, நேற்று சட்டசபையில், 110 விதியில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக துவக்கப்பட வேண்டியது அவசியம். இந்த மக்கள்

இயக்கத்தில், மழை நீரை சேகரித்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் முக்கிய பணிகளாக இருக்கும்.

மேலும், மானாவாரி வேளாண்மைக்காக, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துதல், ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல் போன்ற பணிகளும் செயல்படுத்தப் படும். இந்த திட்டம், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், பல்வேறு துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.


நகர பகுதிகளில், வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும், நீர் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படும். அதில், பெண்கள் பெருவாரியாக கலந்து கொள்வது, உறுதி செய்யப்படும். நீர்வள

பாதுகாப்பு இயக்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்ற, தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவக்கப்படும்; ஒரு மாதம் பிரசாரம் செய்யப்படும். இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பர்.


இந்த இயக்கத்தில், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக்கப்படும். பருவ மழை காலத்திற்கு முன், நீர்நிலைகளை மேம்படுத்தி, மழை நீரை சேமிக்க, வழிவகை செய்யப் படும். குடிமராமத்து திட்டத்தில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,829 பணிகள்; காவிரி டெல்டா பகுதி கால்வாய்களை சீரமைக்க, 61.38 கோடி ரூபாய் மதிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள பணிகள், முக்கியமாக செயல்படுத்தப்படும்.

கிராமம்தோறும் சிறுபாசன

ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் கொள்ளளவு அதிகரிக்கப் படும். இதற்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி, 750 கோடி ரூபாயுடன், கூடுதல் சிறப்பு நிதியாக, தமிழக அரசு, 500 கோடி வழங்கும். மொத்தம், 1,250 கோடி ரூபாய், இப்பணிகளுக்கு பயன்படுத்தப் படும். சென்னை மாநகரில் உள்ள, 210 நீர்நிலைகளில், 114 நீர் நிலைகளில், 100 கோடி ரூபாய் செலவில், விரைவில் சீரமைப்பு பணிகள் துவக்கப்படும்.


கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க, மத்திய அரசுடன், தமிழக அரசு தொடர்ந்து, முயற்சி மேற்கொள்ளும். 1,700 கோடி ரூபாயில், கழிவு நீரை சுத்திகரித்து, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு, தண்ணீர் வழங்கும் திட்டப் பணிகள், விரைவில் துவங்க உள்ளன.காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து, முழுமையாக மீட்டெடுக்க, 'நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டம் துவக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.


அதேபோல், பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில், அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan - Doha,கத்தார்
21-ஜூலை-201923:39:16 IST Report Abuse

natarajanவேசி ஊடகங்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஊடகமாக வளம்வரும் தினமலருக்கு மனமார்ந்த நன்றி.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
21-ஜூலை-201922:15:51 IST Report Abuse

oceதமிழக பொறம்போக்குகளை ஆக்ரமித்து வீடுகள் கடைகள் கல்லூரிகள் பள்ளிகள் திரை அரங்குகள் கட்டி நீர் நிலை களை வற்ற செய்தவர்கள் யார் எசமான். ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தம் என்று சினிமா வசனம் எழுதிய கட்சியினரா எசமான்.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
21-ஜூலை-201922:01:35 IST Report Abuse

தமிழ் மைந்தன்தினமலர் செய்தியை வைத்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது நல்ல செய்தி....... ஆனால் அதே தினமலரில் ஊழல்,அராஜகம், நில மோசடி, பொதுமக்கள் மீது தாக்குதல், பாலியல் கொடுமை இவைகளை பற்றியும் செய்திகள் வருது...... ஆனால் திமுக திருந்துவது மாதிரி தெரியவில்லையே.........

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X