அரசியல் செய்தி

தமிழ்நாடு

செம்மொழி மாநாடுக்கு புலிகள் ஆதரவு: பாராட்டுகிறார்

Updated : ஜூன் 22, 2010 | Added : ஜூன் 20, 2010 | கருத்துகள் (18)
Advertisement

சென்னை: "தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, விடுதலைப்புலிகளின் அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதாக' முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகள், "திடீர்' அறிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் இந்த அறிக்கை, நேற்றைய, "தினமலர்' நாளிதழில் வெளியானது. புலிகளின் இந்த திடீர் அறிக்கை, உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "இந்த அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும்' முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி, அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகிற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு, செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். "தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு, வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா' என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துக்களில் எள்ளளவும் வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


"இலங்கையில் நடந்த அவலத்தை, அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்து விடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, "அவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல' என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினர், இன்னமும் குலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.


இந்த நேரத்தில், மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கிவிடாது; ஒரு காலத்தில் உதறிக்கொண்டு, எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே, எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போல பதறித் துடித்து, ராமாயணத்து கூனி போல பாட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, "இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு' என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்' என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அறிக்கையை வரவேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் எந்த இடத்திலும், "விடுதலைப்புலிகள்' என்ற வாசகத்தை பயன்படுத்தாமல், "அமைப்பு' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvan - seremban,மலேஷியா
23-ஜூன்-201002:38:17 IST Report Abuse
 selvan tamil maanaadu enraal tamil mozhiyin sirappai mattume pesa vendum athai viduthu thiviravaathi amaippin arikkai, arasiyal kalpunarchi pechu ena tamilai ilivu padutha vendaame tamila. Tamila enru nee unara pogiraai!! Tamil mozhi semmozhiyayinum, tamilan senthtamilanaaga maaruvathu kadiname...
Rate this:
Share this comment
Cancel
Anniyan - Chennai,இந்தியா
22-ஜூன்-201012:48:52 IST Report Abuse
 Anniyan சக்தி வேல் அவர்கள் சொல்வது 100 க்கு 100 உண்மையே.. இது எங்களை சொல்லி குற்றம் இல்லை.. இந்த குமுறல்கள் நேற்று இன்று முளைத்தது அல்ல.. 50 வருட குமுறல்கள்.. 50 வருடமாக அரசியலில் நடக்கும் நாடகங்களை பார்த்து பார்த்து எது உண்மை எது நாடகம் என்று அரசியல் வாதிகளால் அறிவு மங்கி மண்டி கிடக்கிறது.. இந்தியா சுதந்திரம் பெற்று 63 வருடங்கள் ஆகியும் இன்றும் தமிழர்கள் விவசாயத்தையும், மின்சாரத்தையும் நம்பி வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு சொந்த நாட்டிலேயே திக்கு தெரியாத காட்டில் அகதிகள் போல் வாழ்க்கை நடத்துகின்றனர்.. இந்த 63 வருட ஆட்சிகளில் அவர்கள் கட்சிகளை வளர்ப்பதற்கான திட்டங்களில் பாதி நாட்டு மக்களுக்கும் தீட்டியிருந்தால் தமிழனான மாமரனுக்கும், விவசாயிகளுக்கும், அடித் தட்டு மக்களுக்கும் இந்த அவல நிலை ஏற்ப பட்டிருக்காது .. இன்றும் தேர்தலின் பொது Rs 100, பிரியாணி பொட்டலம் கொடுத்து அவர்களின் அறியாமையில் தான் வெற்றி பெற துடிக்கிறார்களே தவிர அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும் என்று நினைப்பதில்லை.. உலக மொழிகளில் சிறந்து விளங்கும் நம் மொழியான தமிழ் மொழிக்கு வாழ்த்துக்கள் வளர்க என்று கருத்து பதிவு செய்து விடலாம்.. அது சுய நலம்.. இந்த செம்மொழி மாநாடு பற்றி வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்கதியாக நிற்கும் தமிழனிடம் கருத்து கேட்பதே ஞாயம்.. எது எப்படியோ..நசிவு பெற்றிருக்கும் தமிழனின் வாழ்வும் தமிழும் செழிக்க நமது தமிழின் செம்மொழி மாநாடு மூலம் கடவுளை இதய பூர்வமாக பிரார்த்திப்போம்.. தமிழ் வெல்லும்..
Rate this:
Share this comment
Cancel
D.ஜெயசங்கர் - MARAIMALAINAGAR,இந்தியா
22-ஜூன்-201008:53:40 IST Report Abuse
 D.ஜெயசங்கர் விடுதலை புலிகள் இந்த அறிக்கையை விட்டு இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான் ஏனென்றல் இப்பொழுதாவது அவர்களுக்கு தமிழ் பற்று (புத்தி) வந்திருக்கிறதே. தங்கள் இன அமைப்புகளுக்குளே ஒற்றுமை இல்லாமல் ஒருவருக்கொருவர் அழித்து கொண்டு அவர்களுக்கு உதவி கரம் நீட்டியவர்களையும், அமைதியான அமிர்தலிங்கம் போன்ற உள்ளூர் தலைவர்களை தீர்த்து கட்டிவிட்டு, கடைசியில் தங்களும் தனி மரமாகி, என்ன நோக்கத்துக்காக பாடுபட்டார்களோ, அதை அவர்களே சிதைத்துவிட்டு. இப்பொழுது உணர்கிறார்கள். வாழ்க தமிழ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X