பாக்.கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100 -ஐ தொட்டது

Added : மே 02, 2011 | கருத்துகள் (4) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலியப்பொருட்களின் விலை தாறுமாறாக எகிறியதைத்தொடர்ந்து டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100 ஐ எட்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே போவதால் இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயரத்துவது வழக்கமான ஒன்றாக உளளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகபட்சமாக ரூ. 2 வரை உயரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலியப்பொருட்களின் விலை தாறுமாறாக எகிறியதைத்தொடர்ந்து டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100 ஐ எட்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே போவதால் இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயரத்துவது வழக்கமான ஒன்றாக உளளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகபட்சமாக ரூ. 2 வரை உயரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 100 வரை எகிறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் செய்தி ‌தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலைகடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் பீப்பாய் ஒன்று ரூ. 117 வரை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களில் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு்ள்ளது. மேலும் பொது விற்பனை வரியின் கீழ் பெட்ரோலிப்பொருட்கள் வருவதால் அதி விரைவு டீசல் விலை லிட்டர் ஒன்றுக்குரூ. 99.92 பைசாவிற்கும், அதிவிரைவு பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 88.41-க்கும், கெரசின் விலை லிட்டருக்கு 89.70-ககும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்போக்குவரத்து பயன்பாட்டிற்காக எரிபொருள் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T Mohan - Madurai,இந்தியா
02-மே-201114:49:36 IST Report Abuse
T Mohan 1 இந்திய ரூபாய் = 1.91 பாகிஸ்தான் ரூபாய் எனவே இந்திய ரூபாய் மதிப்பில் பாகிஸ்தானில் ஸ்பீட் பெட்ரோல் விலை 46.29 ரூபாய், இந்தியாவில் 65 ரூபாய்!
Rate this:
Cancel
T.Prakash ....Enjoy Every Movements... - Nellore ,இந்தியா
02-மே-201112:57:35 IST Report Abuse
T.Prakash ....Enjoy Every Movements... யோவ், கருணாநிதி இதை பார்த்தா, அப்புறம் பாகிஸ்தான் ல டீசல் 100 ரூவா, பெட்ரோல் 90 ரூவா , இங்க மட்டும் தான் குறைந்த விலை அப்படின்னு அலப்பறை பண்ணுவாரு .
Rate this:
Cancel
Veera Vaniyar Peravai - Vilupuram,இந்தியா
02-மே-201112:41:27 IST Report Abuse
Veera Vaniyar Peravai இப்ப தான் நம்ப அரசியல்வாதிகள் மறந்து இருகாங்க, இந்த நியூஸ் நம்ப அரசியல்வாதிகளுக்கு கண்ணுல பட்டுச்சுன்னா , நாங்க செத்தோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X