பொது செய்தி

இந்தியா

கட்டுப்பாடுகள் தளர்வு: மீண்டு வருகிறது காஷ்மீர்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (13)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுவாக அமைதி நிலவுகிறது; மிகவும் மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது.






ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுப்பதற்காக, பெரும்பாலான பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; சில இடங்களில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் பெரும்பாலான பகுதி களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதையடுத்து, சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில், பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், மாணவர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.





இந்த நிலையில் நேற்று, மாணவர் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.மாவட்டங்கள் இடையே வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன. தொலைபேசி சேவை மேம்பட்டுள்ளது. அதே நேரத்தில், செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.மாநிலத்தில், விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வரும் நிலையில், இயல்பு நிலை அங்கு திரும்பி வருகிறது. எவ்வித போராட்டங்களோ, வன்முறைகளே, நேற்று நடக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஆக-201914:55:07 IST Report Abuse
Lion Drsekar விளையாட்டுக்கு சொல்லவில்லை இது சத்தியம், பத்து நிமிடம் முடிவெட்டும் கடையில் வைக்கப்பட்டு இருந்த நேற்று, இன்றய செய்தித் தாள்களில் படித்தேன் தலை சுற்றியது வீட்டுக்கு சென்று ஈரத்தை அழுத்தத்தை சோதித்தால் 190 ஐத் தாண்டியது, நம்ப மாட்டீர்கள், எந்த ஒரு மாத்திரை மருந்தும் எடுக்க வில்லை, தினமலர் பத்திரிக்கை முழுவதையும் படித்தேன், சத்தியமாக கூறுகிறேன் இரத்த அழுத்தம் 135 க்கு வந்தது. காரணம் நாட்டுப்பற்றுடன் வாழும் நாம் செய்வது அறியாமல் 70 ஆண்டுகள் எல்லாவற்றையும் இழந்து வழி தெரியாமல் சிதைந்து போய்விட்டோம், இப்போது சட்டம் என்பது எல்லோருக்கும் சமம், இப்படித்தான் மனிதன் வாழவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எப்படி எல்லாம் மக்களை திசை திருப்பி , நாட்டை சீரழிக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனம் வெந்து போகிறது, புகைப்படத்தில் காணப்படும் அமைதியைக்கொண்டு வந்து நாட்டை வளமாக்க முயற்சி செய்யும் இந்த தருணத்தில் அமைதிக்கு நேர்மாறாக செய்திகள், வதந்திகள், தீய சக்திகளின் போக்குகள் இப்படி சென்றால் தளர்வு என்பதற்கு பதிலாக .... கொண்டுவந்தால் மட்டுமே விடிவு பிறக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
23-ஆக-201912:53:02 IST Report Abuse
Appan மோடி நாட்டிற்க்காக வாழ்வை தியாக செய்தார் என்கிறார்கள்..அதாவது மோடி ஒரு கர்மா வீரர்..அவர் செயல்..போற்றுவர் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என பனி செய்ப்பவர்..அவருக்கு புகழ்ச்சி, இகழ்ச்சி ரெண்டுமே ஒன்னு தான்.. ஆனால் இப்போ மோடிக்கு அமித் ஷா புகழ்மாலை போடுகிறார். எதற்கு..?.. That is you scratch, then I scratch....இது கர்மா வீரருக்கே பொருந்தாது...இப்போ பொருளாதாரம் அதல பாதத்திற்கு போய் கொண்டு இருக்கிறது...இவ்வளவு பெரிய நாட்டில் சோற்று பஞ்சம் வந்தால் வன்முறை கட்டுக்கட்டங்கள் போகும்..இது தான் இந்துத்துவவா..?
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
24-ஆக-201914:56:20 IST Report Abuse
Darmavanபொருளாதாரம் போய் கொண்டிருப்பதற்கு ஆதாரம் உள்ளதா.மற்றநாடுகளைவிட இங்கு நன்றாகவே இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஆக-201909:14:29 IST Report Abuse
Natarajan Ramanathan வெள்ளிக்கிழமை மட்டும் ஊரடங்கு சட்டம் போட்டு மக்களை வீடுகளில் முடக்கினாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X