பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார பஸ்சின் சிறப்புகள் என்ன?

Added : ஆக 27, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
மின்சார பஸ்சின்  சிறப்புகள் என்ன?சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, 'பேட்டரி'யில் இயங்கும், முதல் மின்சார பஸ் சேவை, நேற்று துவங்கப்பட்டது. முதல்வர், இ.பி.எஸ்., கொடியசைத்து, இந்த சேவையை துவக்கி வைத்து, பயணம் செய்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசை குறைக்கவும், பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக, அரசு போக்குவரத்து துறைக்கும், பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'சி - 40' முகமைக்கும் இடையே, 2018 மார்ச், 28ல், முதல்வர் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அரசின், 'பேம் இந்தியா - 2' என்ற, மின்சார வாகனங்கள் தயாரிப்பு திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 64 நகரங்களில், 5,595 மின்சார பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலுார், தஞ்சாவூர் நகரங்களில், 525 மின்சார பஸ்களை இயக்க, ஒப்புதல் கிடைத்துள்ளது.


சென்னையில் துவக்கம்தமிழகத்தில் முதல் முறையாக, சென்னையில், மின்சார பஸ் சேவை, நேற்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில், புதிய பஸ்சை, முதல்வர், இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், துணை முதல்வர், பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலர், சண்முகம், போக்குவரத்து துறை முதன்மை செயலர், ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.தலைமை செயலக வளாகத்தில், மின்சார பஸ்சை துவக்கி வைத்த பின், அதில் ஏறி, இ.பி.எஸ்., பயணம் செய்தார். பஸ் தலைமை செயலகத்திற்கு வெளியே வந்து, உள்ளே சென்றது. முதல்வருடன், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்தனர்.முதல்வர் துவக்கி வைத்த பஸ், சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர்., ரயில் நிலைய பஸ் நிலையத்திலிருந்து, 'ஏ - 1' வழித்தடமான, எல்.ஐ.சி., ராயப்பேட்டை, லஸ், மந்தைவெளி, அடையாறு வழியாக, திருவான்மியூர் வரை செல்லும். தினமும், காலை, மாலையில், தலா, இரண்டு நடைகள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. நேற்று மாலை, இந்த வழித்தடத்தில்
பஸ் இயக்கப்பட்டது.

சிறப்புகள் என்ன?

* மின்சார பஸ் இயங்கும் போது, ஒலி மாசு இருக்காது
* இந்த பஸ்சில், 32 இருக்கைகள் உள்ளன; முழுவதும், குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது; தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. வழித்தடங்களை அறியக்கூடிய, ஜி.பி.எஸ்., வசதி உள்ளது
* பஸ்சில் மின்சாரம் இருப்பு நிலை, வெப்பநிலை, டிரைவர் செயல்பாடு, பஸ் செயல்பாடு, மின்கசிவு ஏற்பட்டால், அதை கண்டறிந்து தானாக செயல் இழக்க வைத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கண்காணிக்கக் கூடிய நவீன தொழில்நுட்ப அமைப்பு உள்ளது
* பஸ்சில், 40 கி.மீ.,க்கு ஒரு முறை, பேட்டரியை மாற்றம் செய்து, அதிகபட்சமாக, 200 கி.மீ., வரை இயக்கலாம். அதற்கேற்ற எண்ணிக்கையில்,
இந்த பஸ்சில், பேட்டரிகள் உள்ளன.
* குறைந்தபட்ச கட்டணம், 11 ரூபாய்; அதிகபட்ச கட்டணம், 25 ரூபாய்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahadevan Sankaranarayanan - Bangalore,இந்தியா
29-ஆக-201906:22:07 IST Report Abuse
Mahadevan Sankaranarayanan பேருந்தின் மேற் கூரையில் சோலார் மின் கலம் அமைத்து அதன் மூலம் பேருந்தின் மின்கலத்தை அவ்வப்போது சார்ஜ் செய்து கொள்ளலாம் .
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஆக-201912:39:28 IST Report Abuse
தமிழ்வேல் Hybrid பஸ்கள், கார்கள் கிடைக்கின்றன. இவை பெட்ரோலிலும், பேட்ரியிலும் ஓடும். இரண்டு மோட்டார்கள் செயல்படுவது அதிகம். இவை மெதுவாக ஓடும்போதும், பெட்ரோலில் ஓடும்போதும் மோட்டார் சுற்றுவதிலிருந்து தானாகவே பேட்டரிகள் சார்ஜ் செய்துக்கொள்ளும். பெட்ரோல் கொஞ்சம்தான் ஆகும். இவை உள்ளூர் (டவுன்) உபயோகத்திற்கு சிறந்தது. பேட்டரிகாரவிட 25 % விலை குறைவு. தற்போது இங்கு அதைத்தான் (toyota priyus ) உபயோகிக்கின்றேன். இங்கு அதிக பஸ்கள் Hybrid யில்தான் ஓடுகின்றன....
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
28-ஆக-201918:30:37 IST Report Abuse
Jayvee தகுதி, திறமை மற்றும் பொறுமையுடன் செயல்படும் ஓட்டுனர்களை மட்டுமே இந்த வண்டிகளை ஓட்ட நியமிக்க வேண்டும்.. தொழிற்சங்க பரிந்துரை பெற்று வரும் கரடு முரடான ஓட்டுனரை அமர்த்தினால். வண்டி ஆறு மாதத்தில் பணிமனையில் படுத்துவிடும்.
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
28-ஆக-201900:32:26 IST Report Abuse
Subramanian Sundararaman 80 களிலேயே பேட்டரியில் இயங்கும் மினி பஸ் கே கே நகரில் இருந்து தி.நகருக்கு ஒரே கட்டணத்துடன் இயக்கப் பட்டது . முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் பஸ் என்பது திருத்தப்பட வேண்டிய தகவல் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X