தமிழகத்தின் பல்வேறு கால கட்டங்களில் புதிது புதிதாய் அரசியல் கட்சிகள் தோன்றின. அரசியல் களத்தில் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் பலர், தனிக்கட்சிகளை அதிரடியாக துவங்கி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், இந்த கட்சிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கி போயின. ராஜாஜியின், சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின், தமிழரசுக் கட்சி, சி.பா.ஆதித்தனாரின், நாம் தமிழர் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின், தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின், நமது கழகம், திருநாவுக்கரசரின், எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க., நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய, மக்கள் தி.மு.க., குமரிஅனந்தன் துவக்கிய, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், பழ.நெடுமாறன் துவக்கிய, தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் என, ஏகப்பட்ட கட்சிகள், தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு, பின்னர் காணாமல் போயின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE