டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி

Updated : மே 04, 2011 | Added : மே 04, 2011 | கருத்துகள் (244)
Advertisement

சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.


"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், "டி.பி., ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.


இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. "கலைஞர் "டிவி'க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபாய் வழங்க, "டி.பி., ரியாலிட்டி' குழுமம் ஏன் முன் வர வேண்டும்?' என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் "டிவி' கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், "கலைஞர் "டிவி'க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.


கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், "ராஜா கைது இருக்காது' என்று அளித்த உறுதியும், "குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது' என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.


வக்கீல் யார்? கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.


கனிமொழிக்கு சம்மனா? இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பணம், "கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,' என்று தெரிவித்தன.


- நமது டில்லி நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (244)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravana kumar - tirupur,இந்தியா
05-மே-201112:47:36 IST Report Abuse
saravana kumar நண்பர்களே இவ்விசயத்தில் காங்கிரஸ் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நடிப்பதை நம் கவனிக்க வேண்டும்.ராஜா கூறுவதில் ஒரு விஷயம் உண்மை.அவர் ஒவ்வொரு முறை விதிகளை மீறும் போதும் பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகம் போன்றவற்றிற்கு தெரிவித்து விட்டே செய்திருக்கிறார்.அப்போதெல்லாம் இந்த நேர்மையாளர்கள் மௌன சாட்சிகளாக இருந்ததன் மர்மம் என்ன?கூட்டணி தர்மமா? கொள்ளையில் பங்கா ?
Rate this:
Share this comment
Cancel
veeratamilan - chennai,இந்தியா
05-மே-201112:32:39 IST Report Abuse
veeratamilan ஊழலை முதன் முதலில் செய்தது கருணா. மிகபெரிய (ஸ்பெக்ட்ரம்) ஊழல் செய்ததும் கருணா தான். மிக அதிகமான (எண்ணிகையில் ) ஊழல் பண்ணியதும் கருணா தான். மிக அதிகமான (தொகையில் ) செய்ததும் கருணா தான். மொத்தத்தில் ஊழலை பொறுத்தவரை பெரும் சாதனை படைத்தவர் கருணா. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். விக்யான ஊழல் என்று ஊழலில் பெரும் சரித்திரம் படைத்தவர். ஊழலின் ஊற்று கண். ஊழலின் தலைவர். ஊழலின் கடவுள்?? (சாத்தான் ).
Rate this:
Share this comment
Cancel
veeratamilan - chennai,இந்தியா
05-மே-201112:29:21 IST Report Abuse
veeratamilan 66 கோடி, 100 ஜோடி செருப்புகள், நகைகள் வைத்திருந்த ஜெயலலிதாவையே தங்களுடைய மீடியா சக்தியினாலும், அதிகாரத்தினாலும் எப்படி எல்லாம் அவர்களை கஷ்டபடுத்திநீர்கள். அப்போது அவர் பெண் என்று உங்களுக்கு தெரியவில்லையா. சாதாரண பணக்காரர்கள், எனக்கு தெரிந்த பணக்காரர்களிடமே இவ்வளவு சொத்து இருக்கும் போது, தானும் பல படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து, தன்னுடைய அம்மாவும் நடித்து சேர்த்து வாய்த்த பூர்வீக சொத்துக்கள் உள்ள ஒருவரிடம் 66 கோடி இருப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. சொல்ல போனால் அது குறைவு தான். ஒன்றுமே இல்லாமல் மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதி குடும்பத்திடம் லட்சம் கோடிகள் இருக்கும் போது, ஜெயாவிடம் 66 கோடி இருந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. அந்த கால கட்டத்தில் ஆச்சரியப்பட்டவர்கள் கூட இப்போது கருணாவின் லட்சம் கோடி கொள்ளைகள், மாநிலத்திலும், மத்தியிலும் நடந்த பிறகு, ஜெயாவுடைய சொத்து ஒரு விசயமாகவே படவில்லை. இன்று தன்னுடைய மகள் மாட்டிவிட்டாள் என்ற உடன் குய்யோ முறையோ என்று கத்துகிறார். இத்தனைக்கும் இந்த கனிமொழி ஊழல் மட்டுமல்லாமல், சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் பல செய்பவர். நேர்மைக்கும் இவருக்கு ரெம்ப தூரம். இப்படி பட்டவர் இவ்வளவு நாள் வெளியே இருந்ததே தவறு. நேற்று பெய்த மழையில் முளைத்த காளன் போல், கட்சியில் வந்த உண்டனே MP பதவி வாங்கி கொண்டு, காலம் காலமாக கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டனர். திடீர் உயர்வு இப்படி தான் தடாலடி யாக கீழே தள்ளும். ராசாவை கைது செய்யும் போது, எதுவுமே செய்யாத கருணா, தன மகள் என்பதற்காக இப்படி வரித்து கட்டி கொண்டு வருவதை பார்த்தாவது, திமுக காரர்கள் திருந்த வேண்டும். நாளை எல்லோருக்கும் இந்த கதி தான். ராசா உள்ளே உருப்பதால் உயிரோடு இருக்கிறார். இல்லை என்றல் சாதிக் பாட்சா போல், சாகடித்திருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X