தமிழ்நாடு

ஏர்இந்திய பைலட்டுகள் ஸ்டிரைக் வாபஸ்

Added : மே 07, 2011
Advertisement

புதுடில்லி: பதவி நீக்கம் செய்யப்பட்ட விமான பைலட்டுகளை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வது, பைலட்டுகளின் பல்வேறு சங்கங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது , மற்றும் விமான நிலைய சேவை நிர்வாகத்தில் முறைகேடுகளை களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சார்பில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து , 10 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்த ஏர் இந்தியா விமான பைலட்டுகள் தங்களது ஸ்டிரைக்கினை வாபஸ் பெற்றனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக விமான பைலட்டுகள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுவிமான போக்குவரத்து பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவர்களது போராட்டத்திற்கு விமான பைலட்டுகளின் பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. டில்லி கோர்ட் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என ‌ உத்தரவிட்டும் இவர்கள் போராட்டத்தை தெடர்ந்தனர். இந்நிலையில் விமான பைலட்டுகள் சங்கங்களுடன் மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சக உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் விமான பைலட்டுகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஏ.எஸ். பகிந்தர் கலந்து கொண்டார். 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் உடன்பாடு எட்டப்பட்டது. இதில் ஸ்டிரைக்கின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட வர்த்தக விமான பைலட்டுகளை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேணடும். விமான நிலை நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பைலட்டுகளின் சங்கங்கங்களுக்குஅங்கீகாரம் வழங்க வேண்டும் இதற்கு மத்திய அரசு எழுத்துபூர்வாக உறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைதொடர்ந்து கடந்த 10 நாட்களாக ஸ்‌டிரைக்கில் ஈடுபட்டிருந்த விமான பைலட்டுகள் நள்ளிரவு முதல் பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர். இதன் மூலம் 10 நாட்களாக நடந்து வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X