Many Terrorists in Pakistan: Barack Obama | பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு| Dinamalar

பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு

Added : மே 09, 2011 | கருத்துகள் (7)
Advertisement
 பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு

வாஷிங்டன்: "ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும். பாகிஸ்தானில் கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதிகள் மேலும் பலர் உள்ளனர்' என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் அபோதாபாத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தது பற்றி, அமெரிக்கா தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அதிபர் ஒபாமா கூறியதாவது:ஒசாமா பாகிஸ்தானில் தங்கியிருக்க உதவியவர்கள், அந்நாட்டுக்குள் இருக்கின்றனரா அல்லது வெளியில் உள்ளனரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.ஆனால், இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் விசாரிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானில் ஒசாமாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை.ஒசாமாவுக்கு உதவியது யார் என்பதை கண்டுபிடிப்பதிலும், விசாரிப்பதிலும் தாங்களும் ஆர்வமாக இருப்பதாக பாக்., அரசு கூறியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகலாம். நான்கைந்து நாட்களுக்குள் விடை கிடைத்து விடாது.இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து பாக்., செயல்பட்டு வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அவையனைத்தும் உண்மை; இன்றும் தொடர்கின்றன.அதே நேரம், பாகிஸ்தான் மண்ணில் உள்ள சில பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு பாக்., ஒத்துழைப்பும் வேண்டியுள்ளது.பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான ஆழமான மனநிலை இருக்கிறது. அதனால், அங்கு அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது சிறிது கடினம் தான்.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HARERAM - bangalore,இந்தியா
10-மே-201110:37:06 IST Report Abuse
HARERAM நம் நாடு விடுதலை புலி பிரபாகரனுக்கு பாடம் / பயிற்சி கொடுத்து உருவாக்கியது. பின்பு அதே பிரபாகரன் நமக்கு பாடம் புகட்டினார், பின்பு அழிந்து போனார். அதே போல் அமெரிக்கா ஒசாமா பின் லாடேன் க்கு பாடம் / பயிற்சி கொடுத்து உருவாக்கியது. பின்பு அதே பின் லேடன் அமெரிக்கா வுக்கு பாடம் புகட்டினர் பின்பு அழிந்து போனார். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-மே-201105:45:44 IST Report Abuse
villupuram jeevithan இந்தியா என்றால் விலை கொடுத்து அரசியல்வாதிகளை வாங்கி விடலாம் .
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai ,இந்தியா
10-மே-201103:38:36 IST Report Abuse
krishna பாகில் உள்ள தீவிரவாதிகள்,anகே இருப்பதை காட்டி கொடுத்தால்,முதல் பலி பாக் தான்.அதனால் தான் மெளனமாக இருக்கிறது.அமெரிக்க இதை புரிந்து எல்லா தீவிரவாதிகளையும் அழித்த பின் உண்மை வெளிவரும்.பாவம் பாகிஸ்தான்.இருதலை கொல்லி எறும்பாக தவிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X