புதுடில்லி: நடக்கவிருக்கும் மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் பாஜ., அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனவும், காங்., வீழ்ச்சியில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் அக்., 21ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அக்., 24ல் வெளியிடப்படுகிறது. கட்சிகளின் பிரசாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அமைப்புகள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பாக இரு மாநிலங்களிலும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளில் பாஜ., அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவின் படி,
அரியானா:
மொத்த இடங்கள்: 90
பாஜ., : 58 முதல் 70
காங்., : 12 முதல் 18
ஜன்னயக் ஜனதா : 5 முதல் 8
இந்திய தேசிய லோக் தள்: 0 முதல் 1
மற்றவை: 3 முதல் 5

மஹாராஷ்டிரா:
மொத்த இடங்கள்: 288
பாஜ., : 142 முதல் 147
சிவசேனா : 83 முதல் 85
காங்., கூட்டணி: 48 முதல் 52